கதையாசிரியர் தொகுப்பு: தோப்பில் முஹம்மது மீரான்

4 கதைகள் கிடைத்துள்ளன.

தங்க வயல்

 

 விலை உயர்ந்த ஏர்கண்டிஷன் செய்த அந்தப் பால் வண்ணக்கார், மகன் பறக்கப் போகின்ற அன்று காலையில் வீட்டு முற்றத்தில் வந்து நின்றது. வெளிநாட்டிற்குச் செல்லும் மகனையும் அவன் மனைவியையும் இரண்டு பேரப்பிள்ளைகளையும் விமான நிலையத்தில் ஏற்றிச் செல்வதற்காக! கார்கள் வீட்டுப் படியை ஒட்டி வந்து நிற்கும்படி, வீடு கட்டும்போது அவர் தூர நோக்கோடு அகலமான வாசலும் போட்டு, முற்றத்தில் சிமெண்டுத் தரையும் போட்டிருந்தார். வெளிநாட்டிலிருந்து வரும் மகனுக்கு உறங்குவதற்கு, அவனுக்காகக் கட்டிய அறையைக் குளிர்ச்சி யூட்டி வைத்திருந்தார்.


45வது வார்டு வேட்பாளர்

 

 மார்கழிப் பனி பொழிந்து கொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த மயானம், பராஅத் (புதுக்கணக்கு) அன்று ஒளி மயமாகக் காணப்பட்டது. புதைகுழிகளில் கிடக்கும் உற்றார் உறவினர்களைப் பார்த்து, நீங்கள் முந்தி விட்டீர்கள், நாளை நாங்களும் உங்களோடு வந்து சேருவோம்’ என்று கண் கசியாமல் ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டு மயானத்தி லிருந்து திரும்புவார்கள். இனி, அங்கு செல்வது அடுத்த ஆண்டில் இதே பராஅத் இரவில். உருண்டு போன ஓர் ஆண்டிற்குப் பின் மீண்டும் வந்த பராஅத் இரவில் மயானத்திற்குச் சென்று ஆறுதல்


நிற்காத கால்

 

 புகழ்பெற்ற அந்தக் கல்லூரியில் புதுசாகத் தொழில் கல்வி துவங்கப் போவதாகப் பத்திரிகையில் விளம்பரம் வந்தபோது பையன் அடம் பிடித்தான். நல்ல கோர்ஸ், வெளி நாட்டிலும் உள்நாட்டிலும் வேலை வாய்ப்பு. எனி டிகிரி என்று விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்தது பிகாம் படித்த அவனுக்குத் தெம்பூட்டியது. எங்கிருந்து பணம் திரட்டி அனுப்பினான் தெரியவில்லை. விண்ணப்பப் படிவம் தபால்காரர் என்னிடம் தரும் நேரம் அவன் வீட்டில் இல்லை, திறந்து படிவத்தில் கண்களை ஓடவிட்ட போதே நெஞ்சு படபடத்தது. நுழைவுத் தேர்வு எழுதவேண்டும்.


அனந்தசயனம் காலனி

 

 இரைந்து வரும் பாயும் பஸ்ஸில் ஓரமாக உட்கார்ந்திருந்த போது துரிதமாக ஓடுவது ரோட்டோரத்து மக்களா பேருந்தா என்ற சந்தேகம் மனசில் கடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. என்னைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களையும் மரங்களையும் மிருகங்களையும் முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நெல் கதிர்மணிகளைச் சூடி நிற்கும் வயல்களும் குலை தள்ளி நிற்கும் வாழைத் தோட்டங்களும் ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தன. ரோட்டோரத்து மரங்களின் தலையிறீருந்து உதிர்ந்த காற்றில் கரத்தில் ஒரு செய்தித்தாள் துண்டு தத்தியது. அப்போதுதான் நான் தேடிச்செல்லும் பேராசிரியர்