கதையாசிரியர் தொகுப்பு: தொ.மு.சி.ரகுநாதன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

க்ஷணப்பித்தம்

 

 மனோதத்துவத்தைப்பற்றி ராகவனுக்கு ஒன்றுமே தெரியாது; தெரிந்திருந்தால் அந்தச் சங்கடங்களும் ஏற்பட்டிராது. அற்பச் சபலமும் தட்டியிராது. ஆனால், ராகவனை விட்டுவிடுவோம். உண்மையில் . மனித வாழ்க்கை மனோ தத்துவ ரீதியில் தான் நடக்கிறதா? அது எனக்குத் தெரியாது. மனிதனுடைய பிரதான குணங்கள் எல்லாம் ரஜோ தமோ சத்வ குணங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ரஜோ குணமாகிய காமத்தை அமுங்கடித்தால், தமோ குணமான குரோத உணர்ச்சியின் கை ஓங்கி விடும். குரோதத்தை உள்ளடக்கினால், காமம் படம் எடுத்துச்


அசலும் நகலும்

 

 1 திருவாளர் பாண்டிப் பெருமாள் பிள்ளை தமது பெளத்திரன் செந்தில் விநாயகத்துக்கு காலாகாலத்தில் காலில் ஒரு கட்டுக் கட்டிப் போட்டுவிட்டு, மண்டையைப் போட வேண்டும் என்று எதிர்பார்த்தார். மேலும் காலஞ் சென்ற தமது புதல்வனும், செந்தில் நாயகத்தின் தந்தையுமான குருபரம் பிள்ளையைப் போல் தம் பேரப் பிள்ளையும் செய்ய வேண்டிய கிரியாதிகளை, உற்ற பொழுதில் செய்யாத காரணத்தால், சகவாச தோஷத்துக்காளாகி, கிருத்திருமத்திரிச்சலில் கிளம்பிவிடக் கூடாதே என்ற பயமும் அவருடைய ஆசையை, அவசரக் கடமையாகக் கருதச் செய்தது. செந்தில்


மாயை

 

 1 கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது. அந்த இடமே பயங்கரமானதுதான். ‘பிள்ளையைப் போட்டு பிலாப்பழம் எடுத்த ஓடை ‘ச் சரிவில் உள்ள அடவிப் பிராந்தியம் அது. அங்கு வானுயர்ந்த பல சாதி மர வர்க்கங்களும் அர்ச்சுனன் வகுத்த சரக்கூடம் போலப் பின்னி நிற்கும். அந்த இடம் பேய் பிசாசுகளுக்குப் பெயர் போனது. அயலூர்க்காரன்கூட அந்த அடவியின் நெருக்கத்தைக் கண்டு அஞ்சுவான். அந்தத் தோப்பின் மேலாக ஓடும் ஐரோட்டுத் திருப்பத்தில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமானதால், அங்கு


மனைவி

 

 1 ராமசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக் கதவைத் தட்டினான் தெரு விளக்கின் ‘இருபத்தஞ்சு பவர் ‘ விளக்கு மட்டும் வீட்டுக் கதவை அடையாளம் காட்டும் புனித சேவையோடு கர்மயோக சாதகம் செய்து கொண்டிருந்தது. ராமசாமியிடம் கைக் கெடிகாரம் இல்லை. எனவே மணி என்ன இருக்கும் என்று நிதானிக்க முடியவில்லை. என்றாலும் டவுனுக்குச் செல்லும் கடைசி பஸ், வரும் வழியில் அவனைக் கடந்து செல்லவில்லை என்ற நிச்சயத்தின் பேரில், மிஞ்சிப் போனால் பத்துப் பத்தரை இருக்கும் என்று நினைத்துக்

Sirukathaigal

FREE
VIEW