கதையாசிரியர் தொகுப்பு: தெளிவத்தை ஜோசப்

11 கதைகள் கிடைத்துள்ளன.

மந்திரகோல்

 

 “சீட் இருக்குதா….” பஸ் நிற்கும் முன்பே அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறும் கூட்டத் திலிருந்து சற்றே விலகி நின்றபடி சிங்களத்தில் வினவுகின்றாள் அவள். கேட்ட மொழி சிங்களம் என்றாலும் கேட்டவர் சிங்களம் இல்லை என்பது ஒன்றும் பெரிய ரகசியம் அல்ல. அது கண்டக்ரருக்கும் விளங்கும். ஆடையால் கூற முடியாவிட்டாலும் உரையாடலால் கூறிவிடலாம். தமிழா? முஸ்லிமா? என்று. ஒடிந்து தொங்கும் மரக்கிளை போல் பஸ் வாசலில் உள்ளேயும் வெளியேயுமாக ஊஞ்சலாடிக் கொண்டிருந்த பஸ் கண்டக்டர் “எய் நெத்தே ஓணதரங்


வேடிக்கை மனிதர்கள் அல்லர்

 

 ஆஸ்பத்திரிச் சந்தியில் பஸ் வேகம் குறைத்து திரும்பியபோது டக்’ கென்று குதித்திறங்கி பஸ்ஸுடன் சற்றே முன்னாலோடி நிதானித்து நின்று கொண்டேன். ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்திறங்குவது கூடாது தான். அபாயகர மானது தான். என்றாலும் எனது அவசரம் அந்த அபாயத்தை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கிறது. மணி அந்தா இந்தா என்று ஐந்து ஆகிக் கொண்டிருக்கிறது. கேட்டை மூடிக் கொண்டான் என்றால் அவனிடம் தலை சொரிய வேண்டும். மூடிய கைக்குள் குறைந்த பட்சம் நூறு ரூபாய் தாளாவது நீட்டிக் கொண்டிருக்க


சுவர்

 

 இந்த நேரம் யார்? இப்படித் தட்டுவது? வீட்டில் இருந்த எங்கள் எல்லோரது மனதுக்குள்ளும் தூண்டி லில் செருகிய புழுவாய் துடித்து நெளிந்து கொண்டிருந்தது இந்த ஒரே கேள்விதான். இந்த நேரம் யார்… இப்படித் தட்டுவது…! போலீஸ் ரிப்போர்ட், அடையாள அட்டை இத்தியாதிகளை மனம் நினைவுபடுத்திக் கொள்கின்றது. இரவு பத்துப் பதினொரு மணிக்கு மேல், இப்படி ஒரு அதிகாரத் துடன் கேட் ஆட்டப்படுகிறது என்றால் யாராக இருக்க முடியும். ஆர்மியாக இருக்கும். அல்லது போலீசாக இருக்கும். அல்லது ஆர்மியும்


சிலுவை

 

 அந்த நாற்பது காம்பிரா லயத்தில் நாலாவது காம்பிரா மட்டும் மஞ்சள் குளித்த பெண்போல் தனியாகத் தெரிகிறது. எல்லாச் சுவர்களுமே புகைமண்டிப்போயும், சாணிப் பூச்சில் வெடிப்பு கண்டும் இருக்கையில், நாலாவது காம்பிராவின் அரைச் சுவர் மட்டும் புது மெருகுடன் வெள்ளை மண் பூசப் பட்டு சுண்ணாம்படித்த சுவர் போல் காட்சியளிக்கிறது. கிளாக்கரய்யா பங்களாவுக்கு வெள்ளையடிக்கத் தள்ளப் பட்டபோதே நைசாகக் கண்டக்டரய்யாவிடம் சிலுவை கேட் டான், ‘ஏவுட்டு காம்பிராவுக்கும் ஒரு ஓட்டு ஓட்டிக்கிடங்களா’ என்று . ‘மூச்! காட்டப்படாது’ என்றுட்டார்


அம்மா

 

 இன்னும் இரண்டொரு சூரியன் இருந்தால்தான் கட்டுப்படியாகும் என்று பட்டது அவனுக்கு. எலும்பைக் குடையும் நுவரெலியா குளிருக்கு. இந்த ஒரு சூரியன் போதாதுதான். டார்வினின் நண்பரும் விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஏர்னஸ்ட் ஹெகல் என்பார், உளசு;சோர்வோ உடற்சோர்வோ உள்ளவர்களுக்கு இது ஒரு மெக்கா என்று வர்ணித்த அதே நுவரெலியாதான். இவனுக்கு இரண்டு சோர்வுமே சேர்ந்தாற்போல் வந்திருக்கின்றன. நிற்க முடியவில்லை@ வெடவெடக்கிறது. நடக்க முடியவில்லை@ நடுங்குகிறது. உட்கார முடியவில்லை@ ஊசியாய் குத்துகிறது!…… இப்படியும் ஒரு குளிரா! இப்படியும் ஒரு ஊரா! காற்றின்


மீன்கள்

 

  தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான். மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப்போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளிய கொழுந்தாய் தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தான். வெலவெலத்துப் போய் குனிற்த தலை நிமிராமல் ஒரு வினாடி உட்கார்ந்து இருந்தவனுக்கு கழிந்துவிட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகமாகத்தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை


கத்தியின்றி ரத்தமின்றி

 

  அந்த மலைகள் மிகவும் பயங்கரமாக எழுந்து நின்றன. மக்களின் உரிமை உடைமை இத்தியாதிகளை சங்காரம் செய்த தென்னாபிரிக்க வெள்ளைக்காரக் கொடுமைகளை விடக் கோரமானதாகத் தலை விரித்துக் கொண்டு நிற்கின்றன. உள்ளே எது நடந்தாலும் அதை வெளியுலகுக்குக் காட்டுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் அவை அந்தத் தேயிலைத் தோட்டத்தை அரண் செய்து நிற்கின்றன. அந்த மலைகளின் ராட்சத உடலில் பட்டி பிடித்தாற்போல் மலைகளைச் சுற்றி வரும் செம்மண் பாதையில் கைப்பிரம்பைச் சுழற்றியபடி நடந்து கொண்டிருக்கிறார் தோட்டத்து


இருப்பியல்

 

 பிதா சுதன் போட்டவாறு கோவிலுக்குள் நான் நுழைந்தபோது முன் வரிசை இருக்கையில் அங்கொருவர் இங்கொருவராகக் கொஞ்சம் பேர் ஜெபமாலையும் கையுமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். சுற்றிலும் நிற்கின்ற சுரூபங்களின் காலடிகளில் கண்ணீரும் கம்பலையுமாகச் சிலர்! கட்டாகக் கொளுத்தப்பட்ட மெழுகுதிரிகளின் நெருப்பு வெளிச்சத்தில் கண் மூக்கு எரிய எரிய கன்னங்கள் மின்ன மின்ன, வழிந்தொழுகும் வியர்வையுடன் வழியுயர்த்திக் குத்திட்டு நிற்கும் சிலர்! சிலுவையில் அறையப்பட்டதுபோல் விரிந்த கைகளுடன் பீடத்தை நோக்கி முழங்கால்களால் நகர்ந்தபடி சிலர்! மாதாவின் காலடியில் ஒரு கொழுத்த


உயிர்

 

 நாங்கள் யாரும் அதை ஒரு நாயாகவே நினைக்கவில்லை! எங்களில் ஒருவராகவே, குடும்பத்தின் ஒருவராகவே ‘அதை’யும் நினைத்துக் கொண்டிருந்தோம்! சமையலறை முன் ஹால், படுக்கையறை நடுத்துண்டு, சாப்பாட்டு அறை என்று நாங்கள் எங்கிருந்தாலும், அதுவும் அங்கிருக்கொனாதபடி எங்களுடன் இருக்கும். நாற்காலியில் உட்கார்ந்திருந்தால், கழுத்தை முழங்காலில் வைத்து தலையை மடியில் சாய்த்தவாறு நின்று கொண்டிருக்கும். பஞ்சு போன்ற அதன் கழுத்தின் வெள்ளையை எங்களையறியாமலே கை தடவிக் கொடுக்கும். தட்டிக் கொடுக்கும். தடவலின் சுகம் தலைiயை மேலும் மடிமீது அழுத்திக் கொள்ள


மனிதர்கள் நல்லவர்கள்

 

 நாளைக்குத் தீபாவளி பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது. கை நிறைந்த பைகளும், பை நிறைந்த சாமான்களுமாய், ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தனர். உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன்@ கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. “இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார். பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக்