கதையாசிரியர் தொகுப்பு: தெனாலிராமன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

செத்தவன் பிழைத்த மர்மம் !

 

  தெனாலிராமனை அழைத்து வந்த காவலரைப் பார்த்து, “”ராஜகுரு எங்கே?” என்று கேட்டார் மன்னர். “”அவர் அடித்த அடியில் நகர முடியாமல் கிடக்கிறார்!” என்றனர் காலவர்கள். “”அடப்பாவிகளா! அவரை ஏன் அடித்தீர்கள்? நான் அடிக்கச் சொன்னது இவனையல்லவா?” “”தோளிலிருப்பவனை நையப்புடையுங்கள் என்றீர்கள்! தோளில் இருந்தவர் அவர்தான்!” என்றனர் பயந்துகொண்டே. “”தெனாலிராமா! எப்படி இந்த மாற்றம்?” என்று ஆத்திரத்தோடு கேட்டார் அரசர். “”மன்னா! தாங்கள் சேவகர்களிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. ராஜகுரு என்னைச் சுமந்து வருவது தங்களுக்குப் பிடிக்கவில்லையோ


சோதிடனைக் கொன்ற கதை

 

  ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான். அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான். பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன்


தெனாலியின் விளக்கம்

 

  கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது. http://www.thehindubusinessline.com/…3101861901.jpg “நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?’ என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர். “”ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?” “”அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள்.


பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

 

  விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து “தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு


கூனனை ஏமாற்றிய கதை

 

  ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார். ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார். ” கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில்

Follow

Get every new post on this blog delivered to your Inbox.

Join other followers: