Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: துடுப்பதி ரகுநாதன்

106 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு நிமிடப் பயணம்!

 

  அது சர்க்கரை நோயாளிகளுக்கான மிகப்பெரிய மருத்துவ மனை. சாப்பிடும் முன் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டியிருந்ததால் காலை ஏழு மணிக்கே நான் அங்கு போக வேண்டியிருந்தது! மருத்துவமனை இருப்பது 5- வது மாடி. நான் ‘லிப்ட்’டுக்காக காத்திருந்தேன். என் அருகில் வந்து ஒரு பெரியவர் நின்றார். அவரின் புகைப் படத்தை நான் பத்திரிகைகளில் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தொழிலதிபர். சிறந்த ஆன்மிகவாதி. அவருக்கு கோவையில் இருநூறு கோடிகளுக்கு மேல் சொத்து இருக்கும். கதர் ஜிப்பா


ஆடித் தள்ளுபடி!

 

  “ஏய்! ……வாட்ச்மேன்!…உள்ளேபோய்உங்கமுதலாளியைஉடனேவெளியே வரச்சொல்!….” “ எதற்குசார்?…” “ சொன்னதைச்செய்!…இல்லாவிட்டால்உனக்கு உதை கிடைக்கும்!…ஜாக்கிரதை!..” என்றுகைகளைஓங்கிக்கொண்டுஅந்தகோடவுன்வாசலில்வந்துசத்தம் போட்டான் முரளி. அந்தவயசானவாட்ச்மேன்பயந்துபோய்விட்டான். உள்ளேஓடிப்போய்முதலாளியிடம், “சார்!…யாரோஒருஆள்வாசலிலில்உங்களைக்கூப்பிடச்சொல்லிஅடிக்கவருகிறார்!” ஆடி தள்ளுபடி விற்பனைக்காகஒருபெரியகோடவுனைவாடகைக்குப்பிடித்துதற்காலிகமாக ஜவுளிவிற்பனைக்கடையைப்போட்டிருந்தார் அருமைநாயகம். வடநாட்டுமில்களிலிருந்துஏகப்பட்டஜவுளிகளைக்கொண்டுவந்துகுவித்திருந்தார்! நிறையவிளம்பரம்செய்திருந்தார். அதனால்ஏகப்பட்டகூட்டம்! அருமைநாயகம்ஒருஅமைதியானமனுஷன்! வாட்ச்மேன்சொன்னதைக்கேட்டுஎன்னவோஏதோஎன்றுவெளியேஓடிவந்தார். அவரைப்பார்த்தவுடன் “நீங்கஎன்னநெனைச்சிட்டிருங்கீங்க?….ரோட்டைஎல்லாம்விலைக்குவாங்கிட்டநெனப்பா?…கொஞ்சமாவதுஅறிவுவேண்டாம்?..” “ தம்பி!….என்னவிஷயம்என்றுசொல்லு!…தப்பாஇருந்தாசரிசெய்திடலாம்!…” “ உங்களுக்குகண்ணாஇல்லை?….அங்கேநீங்களேபாருங்க!…” முரளிசுட்டிக்காட்டியபகுதியில்காம்பௌண்ட்சுவர்ஓரம்நிறையவாடிக்கையாளர்கள்தாங்கள்கொண்டுவந்தடூவீலர்களைவரிசையாகநிறுத்தியிருந்தார்கள். யாரோஒருவர்அந்தவரிசைக்குப்பின்னால்ரோட்டில் தன்டூவீலரைநிறுத்தியிருந்தார். “யாரோஅவசரத்தில்நிறுத்திவிட்டுப்போயிருக்காங்க…தம்பி! வேண்டுமானால்வாட்ச்மேனைவிட்டுத்தள்ளிவைக்கச்சொல்கிறேன்…நீங்கடூவீலரில்தானேவந்தீங்க..அப்படியேகொஞ்சம்தள்ளிஒதுங்கிப்போயிருக்கலாமே?..” “ என்னசார்!.. நீங்கரோட்டைஅடைச்சுஉங்கவண்டியைநிறுத்துவீங்க!…நான்ஒதுங்கிப்போகவேண்டுமா?…. இப்படிஅறிவுகெட்டத்தனமாபேசறீங்க?…நான்அந்தவண்டிமேலஎன்வண்டியைஏற்றி அதைடேமேஜ்செய்திடுவேன்!..அல்லது .நடுரோட்டில்அனாமத்தாகிடந்ததென்றுஎடுத்திட்டுப்போய்போலீஸ்ஸ்டேசனில்விட்டுடுவேன்!…” “ என்னதம்பி!..இந்தசின்னவிஷயத்திற்குபெரியவங்களை மரியாதையேஇல்லாமஇப்படிப்பேசுகிறாய்?..” அதற்குள்வேடிக்கைபார்க்ககூட்டம்சேர்ந்துகொண்டது!. அந்தக்கூட்டத்தைதள்ளிக்கொண்டுஒருஇளம்பெண்வந்தாள். தமன்னாபோல்உடம்பு. சமந்தாவைவிடஅழகு! சினேகாமாதிரிசிரிப்பு. “சார்!..அதுஎன்வண்டி…. அவசரத்தில்நிறுத்திவிட்டு உள்ளேபோய்விட்டேன்.. சாரி!..”


மகிமை!

 

  கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு வந்து, அதை காவல் துறை தீவிரமாக அமுல் படுத்தத் தொடங்கியதில் நந்த குமாருக்கு ரொம்ப சந்தோஷம்! வீட்டில் எல்லோருக்கும் டூவீலர் இருக்கிறது! காலையில் அக்கா சித்ரா ஆபிஸுக்குப் போக ஸ்கூட்டியை எடுக்கும் பொழுது, “கஷ்டப்பட்டு தலை வாரினேன்!…அத்தனையும் கலையப்போகிறது!” என்று முணு முணுத்துக் கொண்டே ஹெல்மெட்டை எடுத்து தலையில் வேண்டா வெறுப்பாக அணிவாள்! அண்ணன் வாசு ஹெல்மெட்டை எடுத்து மாட்டும் பொழுது, “இந்த சனியனை வேறு


பணயம்!

 

  மாநிலத்திலேயே அந்தக் கல்லூரிக்குத் தான் மிக நல்ல பெயர். அந்தக் கல்லூரிக்கு மாநில அரசு, மத்திய அரசு எங்கும் நிறைய செல்வாக்கு உண்டு. ஒரு மாணவனுக்கு அந்தக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டால் அவன் எதிர் காலத்தைப் பற்றிய கவலையை பெற்றோர் சுத்தமாக மறந்து விடலாம்! அதற்கு முக்கிய காரணம் படிப்பு முடிவதற்குள், நாட்டிலேயே மிக அதிக சம்பளம் தரும் பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு நான், நீ என்று வேலைக்கு உத்திரவு கொடுப்பது தான்!


தொப்பை!

 

  அந்தக் காலத்தில் வயசானவங்கதான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வெற்றிலையை மென்று கொண்டே அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம்! இந்தக் காலத்துப் பசங்க சில சினிமாக்களைப் பார்த்து விட்டு மதில் மேல் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்து விட்டாங்க! அன்று மாலை நாலு பேர் சேர்ந்ததும் மதில் மேல் உட்கார்ந்து கொண்டு அரட்டைக் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்கள். செல்வம் தான் முதலில் ஆரம்பிச்சான். அவனுக்கு சினிமா நடிகர்கள் என்றாலே பிடிக்காது.. “வர வர