கதையாசிரியர் தொகுப்பு: துடுப்பதி ரகுநாதன்

110 கதைகள் கிடைத்துள்ளன.

தோழி!

 

  “நேற்று ஏண்டி நீ நடைப் பயிற்சிக்கு வரலே?….” பூங்காவுக்குள் நுழைந்ததும் தோழிகள் மாற்றி மாற்றி சித்ராவைக் கேள்வி கேட்டார்கள்! “ அதை ஏண்டி கேட்கிறே?…எல்லாக் கடைகளிலும் ஆடி தள்ளுபடி போட்டிருங்காங்க! முதலிலேயே போனா நல்ல புடவைகளா ‘செலக்ட்’ பண்ணலாம்!…அதுதான் கடைவீதிக்குப் போயிட்டேன்!” “ அப்ப நீ எத்தனை புடவை எடுத்தே?……அதைச் சொல்லு முதலிலே!….” என்றார்கள் தோழிகள் எல்லோரும் ஆர்வத்துடன். “…….மூணு புடவைகள் எடுத்திட்டேன்… அற்புதமா அமைச்சிட்டது!…நீங்க எல்லாம் போகும் பொழுது எங்க வீட்டிற்கு வந்து பார்த்திட்டுப்


புவனாவும், புத்தகக் கண்காட்சியும்!

 

  முத்துசாமி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கோவை சாயிபாபா காலனியில் வசிக்கிறார். அவருடைய ஒரே மகள் புவனாவும், மாப்பிள்ளை அறிவுச் செல்வனும் திருப்பூரில் ஆசிரியர்களாகப் பணி புரிகிறார்கள். ஞாயிறு தவறாமல் புவனா அப்பாவைப் பார்க்க கோவை வந்து விடுவாள். அப்பா செல்லம்! வந்தவுடன் அப்பாவிடம் ஏதாவது குறை சொல்லி புலம்புவது வழக்கம்! முத்துசாமி ஒவ்வொரு வாரமும் ஏதாவது சமாதானம் சொல்லி திங்கட்கிழமை காலையில் மகளைத் திருப்பூர் அனுப்பி வைப்பார். ஒரு வாரம் வீட்டைக் கவனித்து விட்டு


வியாபாரம் என்பது அரசியல் மாதிரி!

 

  புரத சத்து மிகுந்த ‘ஹெல்த் பிளான்’ என்ற சத்துப் பவுடர் தயாரிக்கும் அந்தக் கம்பெனியின் முதலாளியும், அன்று அந்தக் கம்பெனி மானேஜர் ராம் பிரசாத்தும் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்திக் கொன்டிருந்தார். ‘ஹெல்த் பிளான்’ பவுடரை ‘பாக்கெட்’டில் அடைத்து , மெடிகல் ஷாப்கள் மூலம் அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். “ சார்!…நம்ம கம்பெனி தயாரிப்புகளை, தயாரித்த ஆறு மாதங்களுக்குள் உபயோகித்து விட வேண்டும்…இல்லாவிட்டா கெட்டு போயிடும்!…ஐந்து மாதங்களுக்கு முன்பு தயாரித்த பத்தாயிரம் பாக்கெட்கள் விற்பனை


உண்மை!

 

  காலை ஆறு மணியிலிருந்து பரமசிவத்தின் வீட்டுப் போனும், கைபேசியும் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தன. பரமசிவமும் விடாமல் எடுத்து நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார். காலை ஒன்பது மணி வரை அவருக்கு அதே வேலையாக இருந்தது. போன் மணி ஓய்ந்தவுடன், கம்பியூட்டரில் உட்கார்ந்து பேஸ்புக்கைத் திறந்தார். பேஸ்புக்கில் முன் பின் பார்த்து அறியாத சுமார் நூறு பேர் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லியிருந்தார்கள். பொறுமையாக உட்கார்ந்து எல்லோருக்கும் தன் நன்றியைச் சொல்லி விட்டு, ஒரு


போட்டோவில் தொங்க விடும் உறவா அது?

 

  “ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?….எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி இதே உங்களுக்குப் பொழப்பாப் போச்சு!…..ராத்திரியானா என் உசிரை எடுக்கிறீங்க!….உங்களுக்கு இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் மேன் உத்தியோகம் வேண்டாம்!….இந்த தீபாவளி போனஸை வாங்கிட்டு நின்னுடுங்க! …..வேற ஏதாவது வேலையை நாம தேடிக் கொள்ளலாம்! …காத்தாலே இருந்து ராத்திரி வரை நின்னு நின்னு தினசரி கால்கள் சுரத்துப் போகுது!…..எனக்குப் பார்க்கவே கஷ்டமா இருக்கு!….” என்று சொல்லி விட்டு,இந்துமதி எழுந்து