கதையாசிரியர் தொகுப்பு: துடுப்பதி ரகுநாதன்

110 கதைகள் கிடைத்துள்ளன.

மைசூர் பாகு!

 

  பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் ராமு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் புறப்பட்டான். தன்னுடைய பம்பரத்தை எடுத்துக் கொண்டு புறப்படும் பொழுது, சமையலறையிலிருந்து வந்த நெய்யின் மணம் அவனை திகைக்க வைத்தது! உடனே பம்பரத்தை சட்டை பையில் போட்டுக் கொண்டு சமையலறைப் பக்கம் போனான். அடுத்த இரண்டாம் நாள் நடக்கவிருக்கும் திருவிழாவை முன்னிட்டு, அம்மா மைசூர் பாகு தயாரித்துக் கொண்டிருந்தாள். ராமு அங்கு சென்ற பொழுது, அவனுடைய அம்மா பெரிய தட்டில் நீண்ட


பட்ட மரம் துளிர் விடுமா?

 

  சண்முகத்திற்கு வசதிக்கு குறைவு இல்லை. அவனுக்கு சாதியினர் பலம், உடல் பலம், பணபலம் எல்லாம் இருந்ததால் தெனாவெட்டு அதிகம்! அந்தக் காலனியில் யாரையும் மதிக்க மாட்டான். எந்தப் பிரச்னை வந்தாலும் அடாவடியாகத் தான் பேசுவான். அதனால் எல்லோரும் ஒதுங்கிப் போவார்கள். அவனைக் கண்டு எல்லோரும் பயந்து கொள்வதாக நினைத்து சண்முகம் பெருமை பட்டுக் கொள்வான் உண்மையில் சேற்றில் புரண்டு விட்டு சகதியோடு எதிரில் ஒரு பன்றி வந்தால், தங்கள் மேலே சகதி பட்டு விடக் கூடதென்று


ஆண் குழந்தை

 

  “ மூணாவதும் பெண் குழந்தையா?….இனி என்னடா செய்வது?…..ஸ்ருதிக்கு ஆண் குழந்தை பாக்கியமே இல்லே!….நீ பேசாமே உங்க அத்தை பெண் மாலதியை இரண்டாம் தாரமா செய்துக்கோ!….உன் அத்தையும் பெண் கொடுக்க தயாரா இருக்கா!….நம் சொத்துக்கும், குலத்திற்கும் ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டுமடா!….நீ குழந்தையைப் பார்க்க திருச்சி போகும் பொழுது ஸ்ருதியிடம் எப்படியாவது சொல்லி ….அவ சம்மதத்தை வாங்கி விடு….மத்ததை நான் பாத்துக்கிறேன்!…..” “ ஏம்மா!….ஸ்ருதி பெண்ணியம் அது இதுனு பேசற படிச்ச புதுமைப் பெண்!….இந்த விஷயத்தை


மகளுக்கு கடமை இல்லையா?

 

  “ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?….எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி இதே உங்களுக்குப் பொழப்பாப் போச்சு!…..ராத்திரியானா என் உசிரை எடுக்கிறீங்க!….உங்களுக்கு இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் மேன் உத்தியோகம் வேண்டாம்!….வேற ஏதாவது வேலை தேடிக் கொள்ளுங்க!…காத்தாலே இருந்து ராத்திரி வரை நின்னு நின்னு தினசரி கால்கள் சுரத்துப் போகுது!…..எனக்குப் பார்க்கவே கஷ்டமா இருக்கு!….” என்று சொல்லி விட்டு, இந்துமதி எழுந்து போய் வேலு கேட்ட தைலத்தை கொண்டு வந்து


பாசம் போகும் பாதை!

 

  “ அசோக்!….எனக்கு ரெண்டு வாரமா உடம்புக்குச் சரியில்லே!……காலையிலே எழுந்திரிக்கும்போதே ஒரே தலை சுத்தல்…….உள்ளங்கால் பூராவும் ஒரே எரிச்சல்……வாயில் புண் வந்து ஆற மாட்டேன்கிறது……..ஒரு வாரமா நெஞ்சு வலியும் இருக்குடா!….வீட்டிலே ஒரு வேலையும் செய்ய முடியலே!…டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்!…..” என்று முணகிக் கொண்டே தன் மகன் அசோக்கிடம் சொன்னாள் பூரணி. “ சரியம்மா!….நீ ஒண்ணும் கவலைப் படாதே!…….டி.பி. ரோட்டிலே ஒரு கார்டியாலிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் இருக்காராம்!…….அவர் ரொம்பக் கெட்டிக்காரர் என்றும் ,அவர் இது விஷயத்தை கவனிச்சாச் சீக்கிரம்