கதையாசிரியர் தொகுப்பு: தி.ஸ்ரீ.

8 கதைகள் கிடைத்துள்ளன.

அஞ்சலை

 

 இரவு பத்து மணியிருக்கும். கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே கதவை திறந்த பார்வதிக்கு, அஞ்சலை அந்த நேரத்தில் வந்தது ஆச்சரியமாக இருந்தது. வீட்டு வேலைகளை முடித்து மதியவாக்கில் போனால் அடுத்தநாள் காலைதான் வருவாள். அஞ்சலையின் முகத்தில் பதட்டம் தெளிவாக தெரிந்தது. ”என்ன அஞ்சலை இந்த நேரத்தில”… ”காமாட்சி இங்க வந்தாளாம்மா”… ”இல்லையே, எதுக்கு காமாட்சியை தேடுற”.. அஞ்சலையின் அடிவயிற்றிலிருந்து வந்த ஒரு கேவல் பெரும் அழுகையாக மாறியது. ”முதல்ல உள்ளே


பார்வைக்குத் தப்பிய முகங்கள்

 

 உங்களைப் போலத்தான் எனக்கும் சித்தா மருந்தாளுநர்களைப் பற்றி சங்கரனைப் பார்க்கும் வரையிலும் தெரியாது. மூப்பு தந்த பரிசான மூட்டுவலிக்கு சிகிட்சைப் பெற சித்த மருத்துவப் பிரிவுக்கு போகவேண்டியதாயிற்று. அங்குதான் சங்கரன் பழக்கமானான். ஒருமையில் அழைக்கும் உரிமையை தந்தது சங்கரன்தான். எனது வயது முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். முதல் அறிமுகமே எங்களை மிகவும் நெருங்க வைத்தது. சித்த மருத்துவரை பார்த்துவிட்டு அவரிடம் மருந்துகளை எழுதி வாங்கிக் கொண்டு சங்கரனிடம் வந்தேன். மருத்துவர் எழுதிய சீட்டைப் பார்த்து, என்னிடம் சூரணங்களை


ஜிம்மி

 

 எங்கள் லோக​நா​தன் காலனி பயப்​ப​டும் ஒரே விஷ​யம் ஜிம்​மி​தான்.​ வங்​கி​யில் வேலை ​பார்க்​கும் சோமு​வின் வீட்டு நாய்​தான் இந்த ஜிம்மி.​ மருத்​து​வ​ம​னையை ஒட்​டி​யுள்ள வீட்​டில்​தான் சோமு குடி​யி​ருந்​தான்.​ மருத்​து​வ​ம​னைக்கு தினம்​தோ​றும் பத்து நோயா​ளி​க​ளை​யா​வது கூடு​த​லாக அனுப்பி வைப்​பதை ஜிம்மி ஒரு சேவை​யா​கவே பொறுப்​பு​டன் செய்து வந்​தது.​ இத்​த​னைக்​கும் ஜிம்மி நாட்​டு​நாய்​தான்.​ ஆனா​லும் சோமு வீட்​டார் அதைக் கொஞ்​சும்​போது பார்க்க வேண்​டுமே,​​ உல​கத்​தி​லேயே உயர்ந்த ஜாதி நாய்​களை வைத்​தி​ருப்​போர் கூட இப்​ப​டிக் கொஞ்​ச​மாட்​டார்​கள்.​ கால​னி​யின் மத்​தி​யில் உள்ள தெரு​வா​கப்


தாத்தா

 

 இரவானால் போதும், அப்பா! அப்பா! என என்னை ஏலம் போட ஆரம்பித்து விடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக இந்த ஏலம் தொடங்கிவிடும். வேறெதற்கு, எல்லாம் கதைகேட்கத்தான். படித்தது,கேட்டது,பார்த்தது என எல்லாம் சொல்லியாகிவிட்டது. கஜானா காலியென்றாலும் இலவசத் திட்டங்களை அமுல்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாநில அரசுகளின் நிலையில்தான் நானுமிருந்தேன். அப்பா, சீக்கிரமா வரீங்களா இல்லியா,என கூப்பாடு போட்ட கையோடு, இந்த அப்பா ரொம்ப மோசம், வரவர ரொம்பத்தான் பிகு பண்றாரு என்ற


நேற்று என்பது வெற்று வார்த்தையல்ல

 

 ’அறிவிக்கப்படாத’ நெருக்கடிநிலைப் பற்றி எதிர்கட்சிகள் புலம்பித்தீர்க்கும் காலமிது. ஆனால் நான் சொல்லப்போகும் காலகட்டமோ ’அறிவிக்கப்பட்ட’ நெருக்கடிநிலை கோலோச்சிய காலம். சட்டப்பூர்வமாகவே, இந்திய அரசியலமைப்பு விதி 352-ன் படி நெருக்கடிநிலையை பிரதமர் இந்திராகாந்தி, குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களின் மூலம் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி அறிவித்தார்.இது 21 மாதங்கள் அமுலில் இருந்தது, அதாவது 1977, மார்ச், 21-ஆம் தேதி வரை. எனக்கு அப்போது பதினான்கு வயது. நாடுமுழுவதும் நெருக்கடி நிலை தீவிரமாக