கதையாசிரியர் தொகுப்பு: தி.ஞானசேகரன்

30 கதைகள் கிடைத்துள்ளன.

காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும்…!

 

 அறையின் நான்கு பக்கச் சுவர்களும் என்னை நோக்கி நகர்கின்றன. மெதுமெதுவாக நகர்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தச் சுவர்களுக்குள் நான் நசுங்கிச் சாகப் போகிறேன். தலை சுற்றுகிறது. நெஞ்சு விம்மித் தணிகிறது. இதயம் படபடக்கிறது. தேகம் குப்பென்று வியர்க்கிறது. கைகளால் கண்களைப் பொத்திக்கொண்டு நான் வீரிட்டு அலறுகிறேன். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மணிக்கூட்டில் நேரம் காலை எட்டு மணி. அதன் ‘டிக்டிக்’ சத்தம் பெரிது பெரிதாகிக் கொண்டே வருகிறது. என்னை நெருங்கி நெருங்கி வருகிறது. ஏ.கே 47இன் சத்தம்போல்


மண்புழு

 

 சித்திரவேலருக்கு அந்தக் காட்சி அருவருப்பாக இருந்தது. சனநடமாட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் காதலர்கள் போன்று ஒருவரை ஒருவர் அணைத்தபடி சல்லாபம் புரிந்துகொண்டு, கொஞ்சங்கூடச் சங்கோசப்படாத நிலையில்….. இரு ஆண்கள்! – வெள்ளையர்கள். “என்ன ‘கன்றாவி’யடா இது”- அவர் தனக்குள் முணுமுணுத்தார். அவரின் பக்கத்திலே அவரது பேரன் முருகநேசன். அவனுக்கு இப்போதுதான் வாலிப முறுக்குத் திரளும் வயது. தான் கண்ட காட்சியைப் பேரனும் பார்த்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு அவருக்கு, அப்படிப் பார்த்துவிட்டாலும் தான் அந்தக் காட்சியைக் கண்டு கொண்டதாகப்


சுதந்திரத்தின் விலை

 

 கொழும்பு நகரில் பிரபல்யமானது அந்த ‘லொட்ஜ்’ அங்கு இருந்தவர்களில் அநேகமானோர் என்னைப்போலவே வட பகுதியிலிருந்து வந்தவர்களாகக் காணப்பட்டனர். வெளி நாட்டிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பணம் பெறுவதற்காகச் சிலரும் வெளிநாடு செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்வதற்காக வேறு சிலரும் வெளிநாடுகளிலிருந்து வந்து தமது சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் தவிப்பவர்கள் ஒரு சிலருமாகப் பலர். லொட்ஜின் மனேஜர் மேசையருகே உட்கார்ந்தபடி எனது ‘டெலிபோன்’ உரையாடலைக் கேட்ட வண்ணம் இருந்தார். நான் ரிசீவரை வைத்ததும் என்னைப்பார்த்து புன்னகை செய்துவிட்டு


வாசனை

 

 பஸ்ஸை விட்டிறங்கியதும் சுற்றிலும் கும்மென்றிருந்த இருளும் அதனுள் இருந்துவந்த இரவுப் பூச்சிகளின் இரைச்சலும் என்னைக் கலங்கடித்தன. இறங்கிய இடத்திலிருந்தே ஒரு தடவை பாதையைப் பார்வையிட்டேன். என்னை இறக்கிவிட்டுச் சென்ற பஸ்ஸின் பின்புறச் சிவப்பு சிக்னல் லைட்டின் ஒளி புள்ளியாய் மறைந்து கொண்டிருந்தது. அதன் படிப்படியான மறைவு என்னை ஒரு தனிமையான உணர்வுக்குட் படுத்தியது. பஸ்ஸிலிருந்து இறங்கும்வரை இருளைப்பற்றிய எவ்வித பயமுமின்றி யன்னலோரமாகத் தலையை வைத்துத் தூங்கியபடி வந்ததில் ஊருக்குள் தனியாகத்தான் நடந்து செல்லவேண்டுமென்ற நினைப்பு மறந்து போயிருந்தது.


இதிலென்ன தவறு?

 

 எனக்கு வயது முப்பதுக்கு மேலாகிறது. இன்னும் திருமணம் நடக்கவில்லை. திருமணம் செய்து வைக்கவேண்டிய எனது தந்தை அதைப்பற்றிச் சிரத்தை எடுக்காமலே இருக்கிறார். தந்தையிடம், எப்பொழுதுதான் எனக்குத் திருமணம் செய்து வைக்கப்போகின்றீர்கள் என்று கேட்டுவிட என் உள்ளம் துடிக்கும். ஆனாலும் ஒரு நாளாவது நான் அவரிடம் அப்படிக் கேட்கவில்லை.. என்னுடன் படித்த சிநேகிதிகள் எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சிலருக்கு நான்கைந்து குழந்தைகள் கூட இருக்கின்றன. அவர்களைப் போன்று நானும் கலியாணம் செய்து, குழந்தைகள் பெற்றுக் குடும்பம் நடத்த வேண்டுமென