கதையாசிரியர் தொகுப்பு: தி.ஜ.ர

2 கதைகள் கிடைத்துள்ளன.

விசை வாத்து

 

 என் அத்தானைப் புத்திசாலி என்று கொண்டாடாதவர் இல்லை. அப்படி ஊரெல்லாம் கொண்டாட என்ன என்ன வேண்டுமோ அந்தப் பாக்கியங்கள் அனைத்தும் அவனிடம் இருக்கின்றன. ஸ்வீகார அம்மா வைத்த பெரும் பணம் இருக்கிறது; அலங்காரமான வீடு இருக்கிறது; கிளி மாதிரி மனைவி இருக்கிறாள். ஒன்று மாத்திரம் அவ்வளவாக இல்லை. இந்த விஷயம் கொஞ்சம் சுமார்தான். அது ஒன்றும் அப்படிப் பெரிய விஷயம் அல்ல. எதைச் சொல்லுகிறேன் என்றால், அதைத்தான் மண்டைக்குள்ளே மூளை என்று சொல்லுவார்களே; அந்தச் சங்கதியை. இதற்காக


மூட்டைப்பூச்சியும் கடவுளும்

 

 எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர? ‘படி படி’ என்று பாட்டியும் அம்மாவும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். ‘படிக்காவிட்டால் காபி இல்லை; சாப்பாடு இல்லை’ என்பார்கள். காபிக்காகக் கொஞ்சம் சாப்பாட்டுக்காகக் கொஞ்சம் படிப்பான். என்ன படிப்பான்? தமிழுக்குக் கோனார் நோட்ஸ்; இங்கிலீஷ¤க்கு ஏதோ நோட்ஸ்; பாடங்களை மட்டும் படிக்கவே மாட்டான். பரீட்சையில் சுழிதான். ஆனாலும் என்னவோ ‘பாஸ்’ செய்து விடுவான். அது என்ன