கதையாசிரியர் தொகுப்பு: தி.ஜானகிராமன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

மறதிக்கு…

 

 “தாத்தாச்சாரி, நாலு கார்டு வேணும்யா!” “எனக்கு ஒரு மணியார்டர் இருக்கணுமே, தாத்தாச்சாரி?” “ஓய் தாத்தாச்சாரி, நாளைக்கு வர போது ஒரு பொடிப்பட்டை வாங்கிண்டு வாரும்.மறந்து போயிடப்படாது. உம்மைத்தான் நம்பியிருக்கேன்.” “தாத்தாச்சாரி , இன்னிக்கி துவாதசியாச்சே. இங்கேதான் சாப்பிட்டுப் போயிடுமே.” “தாத்தாச்சாரி, போகிறபோது இந்த லேகிய டப்பாவைச் சிங்கார உடையார் கிட்டே கொடுத்துடுமே.” “வெயில் கண்கொண்டு பார்க்க முடியலே. ஏனையா இந்த அபர வயசிலே, இந்த அவதி? ரொம்ப கௌரவமான உத்தியோக மாச்சீன்னு விட மனசு வல்லியா?” “சாமி,


கோபுரவிளக்கு

 

 திடீரென்று கண்ணைக் கட்டிவிட்டாற்போல் இருந்தது; அவ்வளவு இருட்டு, கிழக்குத் தெருவின் வெளிச்சத்தில் நடந்து வந்ததால் அந்த திடீர் இருட்டு குகை இருட்டாக காலைத் தட்டிற்று. சந்நிதித் தெரு முழுதும் நிலவொளி பரப்பும் கோவில் கோபுரத்தின் மெர்க்குரி விளக்கு அவிந்து கிடந்தது. நட்சத்திரங்களின் பின்னணியில் கோபுரம் கறுத்து உயர்ந்து நின்றது. கோயிலுக்குள் நீண்டு ஒளிரும் விளக்கு வரிசையில் லிங்கத்தைச் சுற்றிய ஒளிவட்டமும் காணவில்லை. கோவில் பூட்டித்தான் கிடக்கவேண்டும். ஏதாவது நாயை மிதித்துவிடப் போகிறோமே என்ற கவலையில் தட்டித் தடவி


பஞ்சத்து ஆண்டி

 

 அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை.” இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில் ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தாள், வீட்டுக்கார