Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: தி.செங்கல்வராய முதலியார்

6 கதைகள் கிடைத்துள்ளன.

கோமளம்

 

  தமிழ்நாடு முற்காலத்தில் சேரமண்டிலமென்றும் பாண்டி மண்டிலமென்றும் சோழமண்டிலமென்றும் மூன்று பிரிவினையுடையது. திருவாங்கூர் மலையாளம் கொச்சி குடகு கோயமுத்தூர் முதலியவை சேரமண்டலத்தைச் சேர்ந்தவை. மதுரையும் திருநெல்வேலியும் பாண்டிமண்டலத்தைச் சேர்ந்தவை. திருவேங்கடம் முதல் திரிசிரபுரம் வரையில் சோழமண்டிலம் பரவியிருந்தது. காவிரியாறு கடலொடு கலக்கின்ற சங்கமுகத் துறையில் காவிரிப்பூம்பட்டினம் என்பது சோழராஜர்களுக்குத் தலைநகராயிருந்தது. அந்தப் பட்டினம் ஆற்றங்கரையில் கிழக்கு மேற்காய் ஐந்து மைல் தூரமும் தெற்கு வடக்காய் நான்கு மைல் தூரமும் பரவியிருந்தது. அந்தப் பட்டினத்தை இங்கே வர்ணித்துப் பொழுதுபோக்குவதில்