கதையாசிரியர் தொகுப்பு: திலகபாமா

10 கதைகள் கிடைத்துள்ளன.

தண்டணைகளின் மகிழ்வில்

 

 தாலிகள் விதவிதமானவை. எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆண்கள் தூக்கிப் பிடித்த சாதியத்திற்கேற்ப தாலிகள் உருவாயிருக்கிறதென்று. இல்லை இல்லை . கொல்லன் கை பிடித்து நெருப்பில் வெந்து அச்சுப் பதிக்கப் படுவதல்ல தாலிகள். பெண்ணின் எண்ணத்தில் கனலாகி , நினைவில் விழுந்திருக்கும் வாழ்க்கையின் அச்சுப் பதியலாகி ஆளுக்கொரு தினுசாய் கழுத்தில் கிடக்கின்றன. தாலிகள் எல்லாப் பெண்கள் கழுத்திலேயும் ஏதாவது ஒரு ரூபத்தில் கிடக்கின்றன. கணவர்களால் பூட்டப் பட்டிருக்கின்றன. அவர்கள் தேடுகின்ற நேரம் மட்டும் பூக்களாக உயிர்த்திருக்கச் செய்து


திசை அணங்கு

 

 இதோ புதை மணலுக்குள்ளிருந்து எடுக்கப் பட்ட அந்த சிலை நாயக்கர் மகாலின் நடுக் கூடத்திற்கு அலங்காரமாய் இன்றி வீற்றிருக்கிறது. .கண்டெடுக்கப் பட்ட சிலை கனவுகள் எல்லாம் தொலைத்து வெற்று சிற்பமாய் இன்று சிரிப்பை மட்டும் ஏந்தியபடி, சுற்றிக் காண்பிக்கும் கைடுகளுக்கு சொல்லப் பட வேண்டிய சுவையான தகவலாய் தரப் பட்டிருந்தது. அதோடவே நின்று போகிறது மனது. இடிபாடுகளுக்கிடை இருந்த அந்த மகால் இன்று புதுப்பொலிவு அடைந்திருப்பது கேள்விப்பட்டு நண்பர்களோடு அதை மீண்டும் கண்டு வரத் திட்டமிட்டிருந்தேன். இதுவரை


தீப்பூக்கும் வாகை!

 

 குமார் தின்று எரிந்த அந்த கொட்டை குப்பைத் தொட்டியில் விழுந்து சப்தமெழுப்பி ஓய்ந்தது. எச்சங்களை தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் என் வீட்டாரிடமும் சப்தமெழுப்பி, சப்தமெழுப்பி ஓய்ந்து போனதை நினைத்துக் கொண்டபடி சாப்பிட்டு முடிந்தவைகளை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் தீபா. மேசை சுத்தமாகிக் கொண்டிருந்தது மீண்டும் அழுக்காகப் படவென்று மேல் வீட்டின் தளத்தில் நடந்து கொண்டிருந்த வேலைகள், கட்டிடம் பிரசவ வலிகளாய் சப்தமெழுப்பி கொண்டிருக்க, சில பேரால் எதையும் லட்சியம் செய்யாது என் மாமியை போல் தூங்க முடிவதை


கிளிகளின் தேசத்தில்…

 

 அந்த அறையில் அடுக்கப் பட்டிரூந்த தீபங்கள் ஜீவாலையில் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாய் எழுத , எழுத்துக்களோடு நகர்ந்து கொண்டிருந்தது விழியொன்று . கருவிழி எழுத்தோடு நகர்ந்த வண்ணம் இருக்க விழி பார்த்துக் கொண்டிருந்ததா? எழுதிக் கொண்டிருந்ததா? என்ற யோசனையில் இருக்கையில் எல்லா தீபங்களும் சிதறி ஓடியது . எங்கோ வெடித்துச் சிதறிய இரத்தத் துளிகள் தேங்கிய துணிக்கற்றை வந்தருகில் விழ திடுக்கிட்டு விழித்தது அந்த கிளி . எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்தி வான் பார்த்தது. இரவில் ,


குளிர்ந்து விட முடியா சந்திரமதி தாலி!

 

 கொளுத்தும் வெயிலை உள்வாங்கியும் ஒளிர முடியாது இருண்டு போயிருந்த அரண்மனைகள். காலியாய்க் கிடந்த உப்பரிகைகளில் இறந்த காலம் காற்றின் தூசாய் மாறிப் படிந்து பிரித்து விட முடியாத படி கிடக்க சந்திர மதி உலாவந்த நாட்களின் வெறுமைகள் மட்டும் இன்று வெக்கை வீசும் காலமாய் உலாத்துகிறது. நகரெங்கும் என் காலடிச் சுவடுகள் பதிய மறுக்கின்ற பொரித்தெடுக்கும் வெக்கை தாண்டி , வீசும் ஆவி கொப்பளிக்கும் காற்று, கடந்து நீரென்று பெயர் சொல்லி திரவமாகி ஓடுகின்ற சாம்பலின் கரையில்,