கதையாசிரியர் தொகுப்பு: திருவிக்ரமன்

1 கதை கிடைத்துள்ளன.

உருப் பெறாத மனிதன்

 

  நானும் என் மகளும் குளத்தில் குளித்துவிட்டு வருகிறோம். என் ஐந்து வயது மகள் குளத்தில் நீந்தும் குதூகல அனுபவத்தை அனுபவிப்பது இதுவே முதல் முறை. முதல் முறையாக ஒரு கிராமத்திற்கு வந்திருக்கிறாள். வெகு நாட்கள் கழித்து என் தாத்தா வீட்டிற்கு வந்திருக்கிறோம். ஆம் தாத்தா வீடுதான். பாட்டி வீடு என்று சொல்லவேண்டும் போல் இருக்கிறது. ஆனால் அப்படி சொல்வதற்கில்லை. பாட்டி எங்களோடு இப்போது இல்லை. இந்த வீட்டில்தான் பாட்டி தன் வாழ்வு முழுவதையும் வாழ்ந்தாள். எங்களைப்