கதையாசிரியர் தொகுப்பு: திருவாரூர் பாபு

21 கதைகள் கிடைத்துள்ளன.

உதவி

 

  அறை ஜன்னல் வழியே ராமு பார்த்தான். தெருமுனையில் கார் கண்ணுக்குத் தென்படவில்லை. மணி பார்த்தான். ஐந்து. அடிவயிற்றில் சுள்ளென ஒரு வலி உண்டாகி மறைந்தது. தினம் காலையில் இப்படித்தான் வலிக்கிறது. சமயத்தில், டாய்லெட் போகும்போது ரத்தம் வருகிறது. சென்னையைத் தாண்டி, மகாபலிபுரம் போகும் வழியில் ஒரு கிராமத்தில், தொடர்ந்து நாற்பது நாட்களாகப் படப்பிடிப்பு. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, குளித்து முடித்து ஐந்து மணிக்குள் தயாராக இருக்கவேண்டும். எப்போது வேண்டுமானாலும் தெருமுனைக்கு கார் வரலாம். அதோ,