கதையாசிரியர் தொகுப்பு: திருவாரூர் பாபு

22 கதைகள் கிடைத்துள்ளன.

சுருட்டு

 

  சுருட்டுச் சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க, நீண்டவரிசை யில் ஆர்வலர்கள் காத்திருந்தார்கள். முத்துராமனுக்கு தான் வந்திருந்த நோக்கம் குறித்து சிறிது வெட்கமாகஇருந்தது. சி.பி.சி.ஐ.டி-யில் அவர் இன்ஸ்பெக்டர். திறமையானவர். 6 வருடங்களுக்கு முன் சேலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவர் என கண்டுபிடிக்கப்பட்டும் அகப்படாமல் போக, கொலையுண்டவரின் மனைவி கோர்ட்டுக்குப் போனாள். சி.பி.சி.ஐ.டி. விசாரணை. அவர் தனிஅதிகாரி, அவருக்குக் கீழே சிலர். கேஸில் ஏதும் புரிபடவில்லை. எந்தப் பக்கம் விசாரிக்கலாம் என்று அவர் திணறிக்கொண்டு இருந்தபோது,


உளவறிய ஆவல்

 

  உளவுத் துறை ஐ.ஜி. ஆனந்தமோகன் பதற்றமாக உணர்ந்தார். ரிமோட்டில் ஏ.சியின் தாக்கத்தைக் குறைத்துவிட்டு, செல்போனில் பதிவாகியிருந்த குறுஞ் செய்தியை மீண்டும் படித்தார். ‘ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேடப்பட்டு வரும் தீவிரவாதி இசாக் அலி, சென்னையில் இருக்கிறான் ரெங்கா.’ ரெங்கா, அவரது இன்ஃபார்மர்களில் ஒருவன். நேற்று இரவு நடந்த உளவுத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கவலைப்பட்டு இருந்தார்கள். உள்துறைச் செயலாளரும் டி.ஜி.பியும் தமிழகத்தில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்கக்கூடாது என்கிற முதல்வரின் எதிர்பார்ப்பை,


யாழ்

 

  தமிழ்ச்செல்வி பதற்றமாக இருந்தாள். திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பின்போது இப்படித்தான் காணப்பட்டாள். நான்கு வருடங்களுக்குப் பிறகு இப்போது! ஆனந்தி, தன் அம்மாவையும் என்னையும் மிரட்சியாகப் பார்த்தாள். மிரட்சிக்குக் காரணம் அறிமுகம் இல்லாத இடம். அவள் வயதையத்த குழந்தைகள் கண்களிலும் அதே மிரட்சி! ”ஏங்க, சொதப்பிட மாட்டாளே?” என்ற தமிழ்ச் செல்வி, ”சாக்லெட் கொடுத்தா என்ன சொல்லுவே?” என்றாள் ஆனந்தியிடம். ஆனந்தி சில விநாடிகள் யோசிக்க, ”என்னங்க இவ இப்படி யோசிக்கறா..?” என்று படபடக்கத் தொடங்கும்போதே, குழந்தை


சூதாட்டத்தில் சில தருமர்கள்!

 

  ”ஐயா..!” வாசலில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்த வேணுகோபால், அழைப்புக் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தார். சுமார் அறுபது வயதான கிராமத்துப் பெரியவர் ஒருவர் தயங்கியபடி நின்றிருந்தார். கையில் இருந்த மஞ்சள் பையில் பேப்பர்கள் துருத்திக்கொண்டு இருந்தன. ”ஐயாதான் சினிமா தயாரிப்பாளர் வேணுகோபாலுங்களா?” வயதாகிவிட்ட நிலையிலும் சிலர் படம் இயக்க வாய்ப்புத் தாருங்கள் என்று கேட்டு வருவதுண்டு. இவர் அந்த வகையாக இருக்குமோ என்கிற தயக்கத்துடன், ”சொல்லுங்க, நான்தான்!” என்றார் வேணுகோபால். ”என்


அது வியாபாரமல்ல!

 

  ராதாகிருஷ்ணன், காந்தியை உற்றுப் பார்த்தார். அவன் கண்கள் கலங்கி இருந்தன. அப்பாவைப் பார்க்கச் சங்கடப்பட்டன. ப்ளஸ் டூவில் 95 சதவிகிதம் எதிர்பார்த்திருந்தான். பிரச்னை எதுவும் இல்லாமல், ஓப்பன் கோட்டாவில் மருத்துவம் படிக்க முடியும் என்று நினைத்திருந்தான். ஆனால், 40 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதில், ஆடிப் போய்விட்டான். மருத்துவம் படிக்க முடியுமா, ஸீட் கிடைக்குமா என்கிற சந்தேகம் அவனுக்குள்! ராதாகிருஷ்ணனுக்கும் வருத்தம்தான். ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை. ஏற்கெனவே மன பாரத்தில் இருக்கும் மகனை மேலும் தண்டிப்பது