கதையாசிரியர் தொகுப்பு: திருவாரூர் பாபு

21 கதைகள் கிடைத்துள்ளன.

நாய்கள் இல்லாத தெரு

 

  “”ஏங்க… இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” அலுவலகத்தில் இருந்து திரும்பிய என்னிடம் மலர்விழி பயமுறுத்தும் தோரணையில் கேட்டாள். “”என்ன நடந்துச்சும்மா…” “”மணிக்கு பவுடர் அடிக்கிறேன்னு. உங்க செல்லப் பொண்ணு… ஒரு டப்பா பவுடர காலி பண்ணியிருக்கா…” விளையாண்டு கொண்டிருந்த அஸ்வினி என்னைப் பார்த்து சிரித்தாள். அந்த சிரிப்பு எட்டு மணி நேர அலுவலக சோர்வை பறந்தோடச் செய்தது. “”என்னங்க, நான் சொல்றது காதுல விழுதா” “”ம்ம். விழுந்ததும்மா…” என்ற எனக்கு, ஒரு டப்பா பவுடர் வேஸ்ட்டாகப்


நான், நிருபர்!

 

  ”தம்பி, சுப்ரமணின்னு என் ஃப்ரெண்ட், உன்னைப் பார்க்க வருவான். அவனோட மகனுக்கு ஏதோ பிராப்ளமாம். கலங்கிப் போயிருக்கான்.” – டெல்லியில் இருந்து அலைபேசியில் ஒலித்த அண்ணன் குரலில் பதற்றம். பிரபல புலனாய்வுப் பத்திரிகையில் சீனியர் கரஸ்பாண்டென்ட்டாக இருக்கும் எனக்கு, இதுபோல உதவிக் குரல்கள் அவ்வப்போது வருவது உண்டு. டீ முடித்து, டேபிளில் ஃப்ரெஷ்ஷாக இருந்த அடுத்த இஷ்யூவை எடுக்கும்போது, இன்டர்காம் ஒலித்தது. ”சார், உங்களைப் பார்க்கிறதுக்காக சுப்ரமணின்னு ஒருத்தர் வந்திருக்காரு.” சிறிது நேரத்தில் உள்ளே வந்தவருக்கு


டிபன் ரெடி

 

  பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சாவித்திரி தவிப்பாக உணர்ந்தாள். தலைமுடியிலிருந்து உதிர்ந்த நீர்த் திவலைகளால் ஜாக்கெட் நனைந்து, முதுகில் ஈரம் உணர்ந்ததா… அல்லது, வயிற்றில் ஓடிய பசிப் பூச்சியா… தவிப்புக்குக் காரணம் எது என்பது புரியவில்லை. திருமணமாகி பதினான்கு வருடத்தில் தவிப்பென்பது அவளது நிரந்த உணர்வாகிப் போனது. இரண்டு பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார்படுத்தி, சிறிதும் விட்டுக்கொடுத்தலே இல்லாமல் இருக்கும் கணவனோடு பல விஷயங்களில் மல்லுக்கு நின்று, ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து அலுவலகத்துக்குப் புறப்படும்போது பாதி நாட்களில் காலை


அமைச்சரின் அழைப்பு!

 

  செல்போனில் ஓ.கே. பட்டனை அமுக்குவதற்கு முன் மணி பார்த்தார் உளவுத் துறை டி.ஐ.ஜி. சந்தானம். துல்லியமாக இரவு மணி 12. அழைத்தது சீனியர் அமைச்சரின் பி.ஏ. என்று உணர்ந்ததும் பவ்யமானார். ”யெஸ் சார்!” ”மினிஸ்டர் உங்களை உடனே கெஸ்ட்ஹவுஸூக்கு வரச் சொல்றார்!” ”இதோ!” டி.ஐ.ஜி-யின் உடம்புக்குள் சின்ன பதற் றம்.’இத்தனை அவசரமாக எதற்கு அர்த்த ராத்திரி அழைப்பு?’ யூனிஃபார்ம் தவிர்த்து பரபரப்பாகப் புறப்பட்டார். அவர் அறையில் விளக்கெரிந்ததுமே செக்யூரிட்டிகள் அவர் அவசரம் உணர்ந்து விறைப்பானார்கள். ”ஏங்க


சுருட்டு

 

  சுருட்டுச் சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க, நீண்டவரிசை யில் ஆர்வலர்கள் காத்திருந்தார்கள். முத்துராமனுக்கு தான் வந்திருந்த நோக்கம் குறித்து சிறிது வெட்கமாகஇருந்தது. சி.பி.சி.ஐ.டி-யில் அவர் இன்ஸ்பெக்டர். திறமையானவர். 6 வருடங்களுக்கு முன் சேலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவர் என கண்டுபிடிக்கப்பட்டும் அகப்படாமல் போக, கொலையுண்டவரின் மனைவி கோர்ட்டுக்குப் போனாள். சி.பி.சி.ஐ.டி. விசாரணை. அவர் தனிஅதிகாரி, அவருக்குக் கீழே சிலர். கேஸில் ஏதும் புரிபடவில்லை. எந்தப் பக்கம் விசாரிக்கலாம் என்று அவர் திணறிக்கொண்டு இருந்தபோது,