கதையாசிரியர் தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்
யசோதரா
உண்மைதானா? இல்லை வதந்தியா? தோழிவிகசிதா பொய் சொல்பவள் அல்ல. தன்னை நன்குஅறிந்தவள். தோழி கூட அல்ல அவள். தங்கைபோல் பழகுபவள். அதனால்தானே ஓடோடி வந்துமூச்சு வாங்க இந்தச் செய்தியைச் சொல்கிறாள். பரபரப்போடு உப்பரிகை நோக்கிச் சென்ற ராணியசோதரா கீழே ராஜவீதியைப் பார்த்தாள். மக்கள்தங்கள் பழைய இளவரசரைப் பார்க்கும் ஆவலோடு,அவர் வரும் திசை நோக்கித் திரள் திரளாகச் சென்று கொண்டிருந்தார்கள். ‘‘இந்தக் கபிலவாஸ்துவுக்கு மறுபடி வர எப்படி அவர் சம்மதித்தாராம்? தந்தையும் மனைவியும் மகனும்நாடும் வேண்டாம் என்று