கதையாசிரியர் தொகுப்பு: தினேஷ்

1 கதை கிடைத்துள்ளன.

சங்கரு

 

  சிறிது கலைத்தே நடந்து வந்தான் ஷங்கர். தலை கலைந்திருந்தது. காலில் இருந்த ரப்பர் செருப்பு பணக்காரர்கள் ரொட்டியில் தடவும் வெண்ணையை போல மெலிதாகி இருந்தன. ஒரு தோளில் துணிப்பையும் மற்றொரு கையில் காகித பொட்டலத்துடன் நடந்தான். தெரு முனையை தொடுகையிலே அம்மா வெளியே காத்திருப்பது தெரிந்தது. தானாக கால்கள் வேகம் எடுத்ததை அவன் உணரவில்லை. “வா சங்கரு” என்று பையையும் பொட்டலத்தையும் வாங்கியவளை முகம் முழுக்க கேள்வியுடன் பார்த்தான். ஏன் அம்மாவிற்கு “ஷ” வும் “ர்”