கதையாசிரியர் தொகுப்பு: தாரமங்கலம் வளவன்

23 கதைகள் கிடைத்துள்ளன.

தோற்றப் பிழை

 

 கொட்டிக் கொண்டிருந்த அந்த மழையை ரசித்த படி, “ எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும்..” என்றாள் நிர்மலா. அவள் அப்படிச் சொன்னது பாலுவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவள் இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும், மழையை அவளால் ரசிக்க முடிகிறதா.. மும்பை மாஹிம் கிரீக்கில், சேறும் சகதிக்கும் இடையில் நிர்மலாவின் அந்த தகர ஷெட் அமைந்திருந்தது. சுற்றிலும் துர்நாற்றம் வீசியது. மும்பையின் குடிசைப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு மழைக்காலம் என்பது நரகம் என்று கேள்விப்பட்டு இருந்த அவனுக்கு, அந்த


இரண்டாவது அத்தியாயம்

 

 தேன் மொழிதான் அந்த ஐடியாவைக் கொடுத்தாள் அவனுக்கு. ஹைதராபாத்தில் கல்யாணம் ஆன புதிதில், வாடகைக்கு ஒரு வீடு எடுத்து மூன்று வருடம் அவர்கள் இருவரும் வாழ்ந்ததை நினைவு படுத்தி, அங்கு நம் புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்றாள் அவனிடம். சென்னையில் அவர்கள் இருந்ததும் வாடகை வீடு தான். அதில் தான் அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தன. பிந்துவை அவன் பார்த்த பிறகு தேன் மொழியை கொடுமை படுத்த ஆரம்பித்து விட்டான். ஆனால் தேன்மொழி அப்போது நடந்து கொண்டது,


கத்திச் சண்டை

 

 அணு ஆயுதத்தின் தீமை பற்றி  சிறுகதை எழுத வேண்டும் என்று ஒரு போட்டி வைத்தார்கள் எங்கள் கல்லூரியில். நான் இந்த சிறுகதையை எழுதிக் கொடுக்க, அணு ஆயுதத்தை பற்றி எழுதச் சொன்னால், இது என்ன கத்திச்சண்டையைப் பற்றி எழுதி கொடுத்து இருக்கிறாய், உன்னுடைய இந்த  கத்திச் சண்டைக்கும், அணு ஆயுதத்தின் தீமைக்கும் என்ன சம்மந்தம்  என்று கேட்கிறார்கள். நீங்கள் படித்து பார்த்துச் சொல்லுங்கள். *** தேவ புரி என்ற நாட்டுக்கு ராஜ வர்மன் என்ற மன்னன் இருந்தான்.


பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு

 

 கயிலை மலை. சிவபெருமானிடம் பார்வதி தேவியின் விண்ணப்பம். “ சுவாமி, பூலோகத்தில் எனக்கு ஒரு இளம் பக்தை. சம்பூர்ணம் என்று பெயர். அவளின் கணவன் மாரி, கிரானைட் கம்பெனியில் வேலை செய்யும் போது, கிரானைட் கற்களை தூக்கும் கிரேன் அறுந்து விழுந்து, அதனடியில் சிக்கி இறந்து போய் விட்டான். சம்பூர்ணத்திற்கு வயிற்றில் ஒரு குழந்தை. கையில் ஒரு குழந்தை. என் பக்தை கதறி அழுகிறாள் சுவாமி…” “ நான் என்ன செய்ய வேண்டும் தேவி.. அவனை உயிர்ப்பித்து


நாராயணனின் நண்பர்கள்

 

 சம்பள கிளார்க் நாராயணன் ஒரு பெண்ணின் போட்டோவை பக்கத்து கிளார்க் சுப்பிரமணியிடம் காண்பித்து இளிக்க, அவனும் ஒரு மாதரி சிரித்தான்.. இருவரும் கல்யாணம் ஆனவர்கள். அந்த போட்டோ கண்டிப்பாக நாராயணனின் மனைவி போட்டோவாக இருக்க முடியாது. மேலும் மனைவியின் போட்டோவுக்கு அப்படி ஒரு மாதரியான சிரிப்பும் வரமுடியாது. “ இது தான் என் ஆளு.. பேரு உமா..” என்று கண் சிமிட்டினான் நாராயணன். “ ஓ… செட் ஆயிடிச்சா…” என்றான் சுப்பிரமணி. “ ஆயிடுச்சி..” நாராயணன். “