கதையாசிரியர் தொகுப்பு: தாமிரா

10 கதைகள் கிடைத்துள்ளன.

குமார் தையலகம்

 

  குமாரைச் சுற்றி வட்டம், சாய் சதுரம், செவ்வகம், அருங்கோணம், முக்கோணம் போன்ற ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அது குமாரின் நண்பர்கள் கூட்டம். அவரது ஆத்மார்த்த நண்பர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால், அதற்கான ரேஷன் கார்டை 50 பேர் வைத்திருப்பார்கள். குமாருக்கு அலியார் ராவுத்தர் உரக் கடை மாடியில் ஒரு தையலகம் இருந்தது. ஸ்கூலைக் கட் அடித்துவிட்டு வரும் ஜேக்கப் புத்தகப் பை வைக்க, அலியார் மகன் அக்பர் திருட்டு தம் அடிக்க, பாண்டியன்


கெளுத்தி மீன்

 

  என் கிராமத்துக்கும் எனக்குமான தொடர்பு அம்மா என்கிற ஒற்றை மனுஷியால் பிணைக்கப்பட்டு இருந்தது. அம்மா, கிராமத்தைத் தன் உயிரில் பொதிந்துவைத்து இருந்தாள். இரண்டு முறை சென்னைக்கு வந்து என்னோடு தங்கிய அம்மா, ஓர் அந்நியத்தன்மையோடு வேற்று மனுஷியாகவே இருந்தாள். ஒரு வீட்டுக்குள் அடைந்துகிடந்து சாப்பிடுவதும் டி.வி. பார்ப்பதுமான வாழ்க்கைமுறை அவளுக்கு ஒவ்வாததாக இருந்தது. ”என்னை ஊர்ல கொண்டுபோய் விட்ருடா. அப்பப்போ வந்து பாத்துக்கோ. என்னால இந்த நரகத்துல இருக்க முடியல” என்றாள். அதன் பின் வருடத்துக்கு


தட்சணின் 26-வது மரணம்!

 

  ‘என் மரணம் இந்தச் சமூகத்துக்கான பேரிழப்பு. இந்தச் சமூகம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது?’ என்கிற வாசகத்தோடு தனது 26-வது தற்கொலைக் கடிதத்தை எழுதி முடித்தான் தட்சணாமூர்த்தி. இந்தச் சமூகத்தின் மீது கருணை காட்டி இத்தனை காலம் வாழ்ந்தது போதும் என்கிற சலிப்பு மட்டுமே அவனிடம் மிஞ்சி இருந்தது. தான் அமர்ந்திருந்த பீட்ஸா கார்னரில் சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தான். எல்லோரும் ஏதோ ஒன்றைப் பேசிச் சிரித்தபடி சந்தோஷமாக இருந்தார்கள். ‘மரணத்துக்கு அஞ்சும் கோழைகளே…


ப்போ… பொய் சொல்றே..!

 

  ”என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்” என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது. ”ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுளை உருவாக்கறானாம். லூஸாடா நீ..? இருக்கிற கடவுள்களுக்குள்ள நடக்கற ஏழரையையே தீர்க்க முடியல. புதுசா ஒரு கடவுளை உருவாக்கப் போறாராம் இவரு. சரக்கப் போடுறா… சரக்கப் போடு!” என்றபடி மீண்டும் குடிக்கத் துவங்கினான். ”எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அதே சமயம் நான் நாத்திகனும் இல்லை. ஆனாலும், எனக்குள்ள இருக்கிற


அமிர்தவர்ஷினி

 

  ஒரு மார்கழி மாதத்துப் பனிக் குளிரில்தான் அவளைப் பார்த்தது. அப்போது என் உலகம் செவ்வகமாக இருந்தது. அதன் ஈசான மூலையில் அவள் வீடு. அங்கிருந்துதான் அவள் சூரியனாய் எழுந்தருள்வாள். மேற்கில் அவளும் நானும் படிக்கும் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடம் பூக்களால் ஆனது. செம்பருத்தி, நித்யகல்யாணி, வாடாமல்லி, காக்கரச மரத்தின் மஞ்சள் பூ மற்றும் எங்கள் காதலால் நிறைந்த பள்ளி அது. வடக்கில் அவளும் நானும் சந்தித்துக்கொள்ளும் சுப்ரமணியசாமி கோயில். தெற்கே அதிகாலையில் ஆனந்த நீராடும் மணிமுத்தாறு