கதையாசிரியர் தொகுப்பு: தாமரை செந்தூர்பாண்டி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தேங்காய்ப் பிச்சை!

 

 ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம். அவர் காரைவிட்டு இறங்குமுன், நலம் விசாரிக்க ஊரிலுள்ள ஆண்களும், பெண்களும் கூடி விட்டனர். விஷயம் தெரிந்ததும், தெருவிற்குள் ஓடோடி வந்தார் தேங்காய்ப்பிச்சை. “”என்ன விஷயம்?” எதிர்ப்பட்ட பெண்களிடம் கேட்டார். “”மேலத்தெரு அருணாச்சலம் வாத்தியார், ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருக்காராம்.” “”அவருக்கென்ன செஞ்சது?” “”அது தெரியாதா ஒங்களுக்கு?” “”தெரியாதே… நான்தான் சென்னைக்குப் போயிட்டு, முந்தா நாள்தானே வந்தேன்?” “”ஓ… அப்படியா? அவருக்கு வயித்துல ஆபரேஷன்


தெளிவு

 

 அம்மாவால் அந்த உண்மையை ஜீரணிக்கவே இயலவில்லை. அவளை, அவனால் எப்படி ஏற்க தோணியது? தான் தவமிருந்து பெற்ற ஒரே மகன் ரகு. அந்த ரகுவுக்கு அவள் ஆசை, ஆசையாய் ஆறேழு பெண்களைப் பார்த்து, அந்த ஆறேழில் எதைத் தள்ள… எதை அள்ள என அலசி, ஆய்ந்து கொண்டிருந்த வேளையில், அவன் சொல்லும் அந்த முடிவை, அம்மாவால் ஜீரணித்துக் கொள்ளவே இயலவில்லை. அம்மாவுக்கு, அமராவதி நல்லூர் அட்வகேட் மகள் அகஸ்தியாவைப் பண்ணி வைக்கத்தான் ஆசை. அத்தனை அழகு அந்தப்

Sirukathaigal

FREE
VIEW