கதையாசிரியர் தொகுப்பு: தாட்சாயணி

16 கதைகள் கிடைத்துள்ளன.

சாட்சிகள் ஏதுக்கடி?

 

  இருள் அடர்த்தியாகக் கவிழ்ந்திருந்த நிலவற்ற நள்ளிரவு.சூன்யம் தடவிய கறுப்புவெளி. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றனவோ விழி மணிக்குள்… அந்தகாரமான அமைதிக்குள் டிக்,டிக்கென்று காதுகளைச் செவிடுபடுத்தும் ஓசை.விர்ரென்று அமைதிப் பிரவாகத்தைச் சிதறடித்துக் கீறல் உண்டாக்குகின்ற காற்றின் கூவல்… ஏதோ இம்சிப்பதாய்…ஏதோ ஒன்று மனதை ரணப்படுத்துவதாய்… ஹ..ஹ…ஹய்யோ…சலனங்களைக் கடக்க மாட்டாத தவிப்போடு மூடிக்கிடந்த சிவசம்புக் கிழவரின் இடுங்கிச் சுருங்கிய வாயிதழ்கள் கொஞ்சம் முனகலாய்த் தொடங்கி, விக்கலின் ஆங்காரத்தோடு முடிவுறுவதாய் வீறிட்டுக் கத்தின. ஒருகணம் வீட்டுக்குள்ளிருந்த அமைதியின் பரிமாணம் சட்டென்று