கதையாசிரியர் தொகுப்பு: தாட்சாயணி

16 கதைகள் கிடைத்துள்ளன.

மழை

 

  சோவென மழை கொட்டக் கூடாது. மெல்லிய சிணுங்கலாய் விழும் மழை. நோகாமல் இலைகளையும், பூக்களையும் வருடினாற் போல மழை. இது அவளுக்குப் பிடிக்கும். உள்ளத்துத் துயரங்களை வாரியடித்துக் கழுவுகின்ற, ஊற்றாய்ச் சொரிகின்ற மழை யென்றாலும் அதிலும் ஒரு தாளலயம் இருக்கத்தான் செய்கிறது. இதெல்லாம் அவளுக்குப் புரியாது. புரிய மறுக்கின்ற பிடிவாதத்தனமொன்றும் அவளிடம் இல்லை. இருந்தாலும் தூவானமாய் விழுகின்ற, அந்தத் தூவானத்தில் நனைந்தால் தடிமன் வருமென்று தெரிந்தாலும் கூட, அந்தத் தூவான மழையில் தான் பிரியம் அதிகம்.


ஒரு பூவரசு , ஒரு கடிகாரம் , ஒரு கிழவி

 

  பூக்கத் தொடங்கியது பூவரசு. ஆள்களில்லாமல் வெறிச்சோடியிருந்த நிலத்தில் விருப்பமில்லாமலே பூத்துப் பூத்துச் சொரிந்து, சருகுகளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் நின்று கொண்டிருக்கிறது. இப்படி எத்தினை தடவை பூத்தது அது. மஞ்சள், மஞ்சளாய், குமிழி குமிழியாய் இதழ்களை மலர்த்திச் சிரித்து, வசந்தகாலப் பண்ணோடு பறந்து வருகின்ற பறவைகளுக்கு,மையலும்,கிறக்கமுமாய் வாசனையூட்டி… இப்போதுதான் பூத்திருக்கிறது பூவரசு. மையலில்லை. வாசனையில்லை. எந்தப் பறவையுடையதும் கீச்சுக் கீச்சும் இல்லை. வறண்ட வேதனையைப் பூக்களாய்ப் பிரசவித்தபடி பூவரசு நின்று கொண்டிருக்கிறது. இந்த யுத்தப் பிரளய காலத்தில்


சாருமதியின் வீடு

 

  அந்த முற்றத்தில் இப்போது பாதச்சுவடுகள் கூடுகின்றன. புதிய,புதிய சுவடுகள்… யார்,யாரோ…? எவர்,எவரோ…? அந்த வீடு முன்னெப்போதும் காணாத பலபேரைத் தன் அறைகளுக்குள் அனுமதிக்கிறது. இன்னும் கொஞ்ச நாள்தான். அதற்குப் பிறகு அந்த வீட்டின் மீதான எனது நெருக்கம் விலக வேண்டியதுதான். இது வரைக்கும் அதனோடிருந்த ஒட்டுறவு கழன்று வெறும் ஏக்கப் பெருமூச்சுக்களோடு அதைத் தாண்டிப் போகவேண்டியதுதான். எனக்கே இந்த அவதி என்றால்…சாருமதிக்கு…? சாருமதி இங்கு இல்லை. அவள் இப்போது இங்கு இல்லாமலிருப்பதே நல்லது. எப்போதாவது அவள்


நர்மதாவின் கடிதங்கள்

 

  நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும் வேறு எவரையும் இன்று மட்டும் நான் காணவில்லை.அவளிடமிருந்து கடிதம் வருவது நின்று பத்து வருடங்களுக்கு மேலாய் ஆகியிருக்கும். அவள் எங்கேயிருக்கிறாள்…? எப்படியிருக்கிறாள்…? என்பதொன்றும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவளைப் பற்றி அறியும் ஆவலும்,ஆர்வமும் என்னுள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதானிருக்கிறது. நான் தேவமஞ்சரி. ரொறண்டோவில் குடியேறிப் பன்னிரண்டு வருடங்கள்.அதற்கு முன் நான்கு வருடங்கள் கொழும்புவாசி.அதற்கும்


கெடுபிடி

 

  “அக்கா, வாங்கோக்கா… கிலோ அம்பது தானக்கா… வாங்கோ…” தீபனா திரம்பிப் பார்த்தாள். சனங்கள் நிரம்பி வழிய பஸ் சிரமப்பட்டு நகர முயற்சித்துக் கொண்டிருந்தது. “கிலோ அம்பது… கிலோ அம்பது…” தீபனாவை மீண்டும் அந்தக் குரல் இழுத்தது. கறுத்துப் பளபளத்துக் கொண்டிருந்த திராட்சைக் குவியல்கள் அவளை வாவென்றழைத்தன. “அரைக்கிலோ போடப்பன்….” பேர்சைத் திறந்து காசை எடுத்தபடியே சொன்னாள். அவள் சொல்லும்போதே சின்னவளின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. சின்னவளுக்கு ஏதேனும் வாங்கிக் கொண்டு போகவேண்டும். இல்லாவிட்டால் அவள் முகம்