கதையாசிரியர் தொகுப்பு: தாட்சாயணி

16 கதைகள் கிடைத்துள்ளன.

தூரப் போகும் நாரைகள்

 

  விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது பார்வதி ஆச்சியின் மனக் கண்ணில் தெரிகிறது. அறுகு வெளியின் நினைப்பு இந்த உயிர் போக முன்பு எப்படிப் போகும்? வேதனைத் திரைகள் படிந்து சுருங்கிப் போன முகத்தில் பேரக் குழந்தைகளைத் தேடும் ஆவல் போல ஒன்று, அந்த மெல்லிய இளம் பயிர்களையும் தேடும் சோகத்தை நெஞ்சில் இழையோட வைத்தது. “அம்மா……… கொஞ்சம் பால் குடியுங்கோ


சிறகிழந்தவன்

 

  முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ ஒரு இரையைக் கவ்விக் கொண்டது. விரட்டி விடுவார்களோ என்ற பயம் தெளிந்ததாலோ என்னவோ மீண்டும் திருப்தியுற்று இரை தேடலில் ஆர்வமாயிற்று. வெளி விறாந்தையில் அமர்ந்தபடி பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவனுக்கு அந்தக் காட்சி பட்டென்று மனதில் ஒட்டிக் கொண்டது. இப்படிப் பிறந்திருக்கலாம், ஒரு பறவையைப் போல… எவ்வளவு சுதந்திரமாய், சந்தோஷமாய் இருந்திருக்கும். இரை தேடுதல்… கூட்டுக்குத்


ஒன்பதாவது குரல்

 

  வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது. கறுப்பு கொஞ்ச நேரத்தில் ஊரையும் மூடுகிற அளவுக்கு வளர்ந்தது.எப்படி மேகம் கறுத்தாலும்,கோவிலுக்குப் போகிறவரைக்கும் துளி விழாமலிருக்க வேண்டுமே,என மனதுக்குள் பிரார்த்தித்தபடிதான் எட்டி நடந்தாள் பாக்கியலட்சுமி.மழை அவளுக்குக் காத்திராமல் ‘சில்’லென்று அவள்மேல் விழுந்து தெறித்தது. முதல் மழைத்துளிகள் கனமாகவிருந்தன. பெரிய தேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக் கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டு சேலைத்தலைப்பை


காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

 

  அன்பான உங்களுக்கு இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில் கொட்டிவிடுகின்றேன் எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே….. உங்கள் முகவரி குறிக்கப்படாமையால் பல பேரின் பார்வையில் சிக்கி இந்தக் கடிதம் படாத பாடுபடப் போகிறதெனத் தெரிந்தும்கூட… எப்படியிருக்கின்றீர்கள்….? உங்கள் நலன் அறியாமல் தவித்து தினந்தினமாய் விடிகாலையில் உங்கள் பெயர் உச்சரித்துக் கொண்டெழுந்து உங்களுக்கான வேண்டுதலோடு… இன்றாவது இன்றாவது என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்குதலாய்… ஒவ்வொரு நாளும் என்னை விழுங்கிக்


ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும்

 

  நான் மானிப்பாயிலிருந்து தட்டாதெருச் சந்தியில் காத்திருந்து என் மகன் வீட்டிற்குச் சென்றபோது காலை பத்துமணி ஆகிவிட்டது. எத்தனை தரம் காத்திருந்து அலுத்துச் சலித்துவிட்டது. முன்பெல்லாம் நாள் தவறாமல் மகன் வீட்டுக்குச் செல்கிறவன் இப்போது இந்த செக்கிங் தொல்லையால் சனிக்கிழமை மட்டும்தான் வருகிறேன். வீட்டுக்குப் போனபோது துளசி அதுதான் என் நாலு வயது சின்னப் பேத்தி தெருவில் ‘அவனோடு’ சிரித்துக் கதைத்துக் கொண்டு நின்றாள். திடுக்கிட்டேன். என்னைத் தெருமுனையில் கண்டவுடனேயே, “தாத்தா,தாத்தா…” என்று ஓடிவந்தாள். தட்டுத் தடுமாறி