கதையாசிரியர் தொகுப்பு: தர்மபுத்ரன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

தாராள மனசு

 

  அம்மா இரண்டு புத்தம்புது லெஹன்கா மாதிரி ஆடைகளைக்கொண்டு வந்திருந்தாள். அளவைப்பார்க்கும்போது எனக்கு கச்சிதமாகப்பொருந்தியது. வண்ணமும், வடிவமைப்பும் மிகவும் அழகாக இருந்தன. பள்ளியில் சில பணக்கார வீட்டுமாணவிகள், விழாக்கள், கொண்டாட்டங்களின்போது, இது போன்ற விலை யுயர்ந்த ஆடம்பரமான ஆடைகளை அணிந்துவரும்போது, என்னால் இதுபோல் வரமுடியவில்லையே என்ற ஏக்கம் எழுவது உண்டு. அடுத்தவாரம் பள்ளியில் ஏற்பாடு செய்திருக்கும் விழாவுக்குப்போட்டுக்கொண்டு போகவேண்டும். விலை சீட்டைப்பார்த்துவிட்டு, “ஏதம்மா பணம்? இவ்வளவு விலை கொடுத்து வாங்கி யிருக்கிறாயே” என்று கேட்டேன். “நம்மால் இவ்வளவு


தாலி பாக்கியம்

 

  காலை ரயிலில்வரும் என் மாமியாரை அழைத்துவர அஸ்வின் காரை எடுத்துக்கொண்டு ஐந்தரை மணிக்கே புறப்பட்டார். நல்லவேளை! திடீரென்று திட்டமிட்டபடி, திருப்பதி சென்று வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டு, நேற்றே திரும்பிவிட்டோம். நான் குளித்து விட்டு காலைச்சிற்றுண்டி செய்ய ஆரம்பித்தேன். நேத்ராவும் பள்ளிக்குச்செல்ல கிளம்பிக்கொண்டிருந்தாள். மாலையில் அலுவலகம் சென்று திரும்பியபின்தான் மாமியாரிடம் சாவகாச மாகப்பேசவேண்டும். சட்னியை மிக்சியில் அரைத்துவிட்டு நிமிரும்போது வந்துவிட்டார்கள். நேத்ரா ஓடிச்சென்று பாட்டியைக்கட்டிக்கொண்டாள். வரவேற்ற என்னைக்கவனித்த அத்தை அதிர்ச்சியில் உறைந்து, கோபம் கொப்பளிக்க, “என்ன லாவண்யா இது?


ஊதிய உயர்வு

 

  கோவை எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் பத்தாவது நடைமேடையில் புறப்பட ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தது. கோவையில் ஒரு திருமணம்: திருமணங்களுக்கு மனைவியும் நானும் தம்பதிசமேதராகத்தான் செல்வோம். இம்முறை அவளால் வரவியலாததால் நான் மட்டும். வண்டி புறப்படும் நேரத்திற்கு இருபது நிமிடங்களுக்கு முன்னதாகவே இருக்கைக்கு சென்று அமர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். கடைசி நிமிடத்தில் அரக்க பரக்க ஓடிவந்து வண்டியைப் பிடிக்கும் வயது இது அல்லவே! என்னைப்போலவே இன்னும் சில மூத்த குடிமக்கள், தங்கள் சுமைகளை மேலே ஏற்றிவிட்டு வசதியாக அமர்ந்து


அவசர சிகிச்சை உடனடி தேவை

 

  அலுவலகத்தில் என்னுடைய கேபினுக்கு வெளியே, டை கட்டிக்கொண்டு மிடுக்காக ஒருவர், அவர் விசிட்டிங் கார்டை பியூனிடம் கொடுத்துவிட்டு காத்திருந்ததை கண்ணாடி வழியாகப்பார்த்தேன். நான் கையெழுத்திட்ட பைல்களை, அலுவலக உதவியாளர் எடுத்துச்சென்றபின், பியூனைக்கூப்பிட்டு அவரை அனுப்பச்சொன்னேன். விசிட்டிங் கார்டைப்பார்த்தபோது, நகரின் பிரபலமான கார்பொரேட் மருத்துவமனை: வந்திருந்தவர் பெயர் ராஜேஷ்: பெயருக்குப்பின்னே எம் காம், எம் பி ஏ, டிப்ளமோ என்று ஏகப்பட்ட படிப்பு படித்திருந்தார். மருத்துவமனைக்கும், அவர் படிப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால், அவர் அங்கு


வாழ்க்கைத்தரம்

 

  “அப்பா! வரும் வெள்ளிக்கிழமை அண்ணன் இங்கு வருவதாக இ மெயில் அனுப்பியிருக்கிறது!” குதூகலமாக குழந்தையைப்போல் சொன்னாள் தேன்மொழி. நீண்ட இடைவெளிக்குப்பின் பிறந்தவள். மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். குதூகலம் தொற்றிக்கொள்ள, அவள் அம்மாவிடம் சொன்னேன், “அப்பாடா! ஐந்து வருடங்கள் கழித்து நம்மூருக்கு வருகிறான் பாரி. எத்தனை நாட்கள் விடுமுறை என்று தெரியவில்லை. எல்லா ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்” அவளோ “ஒரேமகனை இத்தனை வருடபிரிவிற்குப் பிறகு பார்க்கவிருப்பதை நினைக்கும்போ தே படபடவென்றிருக்கிறது” என்றாள். வணிக நிர்வாகம் படிப்பு முடித்தபின்