கதையாசிரியர் தொகுப்பு: தரஹி கண்ணன்
இனி மெல்லச் சாகும்…
காலை பேருந்தின் நெரிசலில் சிக்கித் தவித்த கவிதா தனக்கான பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தாள். இன்று எப்படியும் மேனேஜர் கிட்ட லீவு கேட்டே ஆகனும் நாளைக்கு சனிக்கிழமை சேர்ந்த மாதிரி இரண்டு நாட்கள் கிடைக்கும் இல்லை என்றால் அவ்வளவு தான். தன் மகளின் கோபத்தை நினைத்து பயந்தபடி தன் இருக்கையில் அமர்ந்தாள். காலை அலுவலகம் அதிகமான கூட்டமாக தோன்றியது. அதில் பெரும்பாலும் புதியவர்களாக தெரிந்தார்கள். கவிதாவின் அனுபவம் பேச்சில் தெரிந்தது. அது அவளின் பலம். அதனால் தான்
காத்திருக்கிறாள் அம்மா
காற்றில் மரம் அசைந்து காய்ந்த இலைகளை விழச்செய்தது. முருங்கைப் பூக்கள் உதிர்ந்தது. போராடும் சக்தி இல்லாத பூக்கள் உதிர்ந்து கிடந்தது…மீதிப் பூக்கள் காயாக மாறிக் கொண்டிருந்தது. இரண்டொரு தென்னை மட்டைகள் விழுந்தது. இயற்கையின் விநோதத்தை பாருங்கள். வெளியே இருந்து வரும் எதிர் விசையை எதிர்க்க சக்தி இல்லாத இளம் பூக்களும் உதிர்கின்றன. முதிர்ந்த சருகும் உதிர்கிறது. இதனால் அறியப்படுவது யாதெனில் , எதிர்த்துப் போரிட முடியாத எதுவொன்றும் ,முதிர்ந்த சருகுக்கு ஒப்பானதே. மதிய வேளை என்பதால் தெருவில்