கதையாசிரியர் தொகுப்பு: தமிழ்மகன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

வேறு கிளை… வேறு சுவை!

 

  நான் நான்காம் வகுப்பு படித்தபோது பார்த்த அந்த முகம்தான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் பொறுத்தவரை மஞ்சு அக்காவுக்கான முகம். ஏனென்றால், அதன் பிறகு அவளை நான்பார்க்க வில்லை. தொடர்வண்டி எத்தனை நிறுத்தங்களைக் கடக்கும்போதும் மாற்றமில்லாமல் தோன்றும் ரயில் நிலையம் போல, எந்த வயதுக்குமான முகமாக இருக்கிறது மஞ்சு அக்காவின் முகம். அந்த முகத்துக்கு மட்டும் முதிர்ச்சியே இல்லை. பளிச்சென்ற துறுதுறு முகம். அந்தக் கண்களும் உதடுகளும் இன்றும் பிரகாசமாகவே இருக்கின்றன. தேவைப்பட்டபோதெல்லாம் மனதின்


நோக்கம்

 

  அலை அடிக்கும் கடலோரம் ஆயாசமாக அமர்ந்தான் ராமன். கடல் கடந்து வருகையில் தண்ணீருக்குத் தவித்துப் போய்விட்டாள் சீதை. நடுவிலே இளைப்பார வசதியில்லா வெயில். சிவனை பூஜித்துப் புறப்படுவதாக எண்ணம் ராமனுக்கு. லட்சுமணன் இந்தப் பிராந்தியம் பாதுகாப்பானதுதானா? காட்டுவிலங்குகள் தாக்கக் கூடிய இடமா என்பதிலேயே கவனமாக இருந்தான். அவன் சற்றுத் தள்ளி நின்றவாறு இலங்காபுரி நோக்கி பார்வையிட்டுக் கொண்டிருந்தான். வானரங்கள் அங்கும் இங்கும் மரத்தடிகளிலே களைப்பாறிக் கொண்டிருந்தன. மணல் வெளியில் ஊற்றெடுத்து சீதாபிராட்டிக்கு சுரைக்குடுவையில் நீர் முகர்ந்து


வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி

 

  சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. “அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்” என்றான் ஆல்பர்ட். “ஆப்பிரிக்காவை விட்டால் குஜராத்தின் கிர் காடுகளில் சில எஞ்சியிருக்கின்றன. அசாமில் இருந்தவற்றை எப்போதோ வேட்டையாடி முடித்துவிட்டார்கள்” என்றான். மற்ற மூவருக்கும் நப்பாசை. கிழக்கு இமயமலை அடி வாரத்தின் அடர்த்தி பற்றிக் கேட்டிருந்தாலும் பிரம்மபுத்ராவின் பேரிரைச்சலோடும் குளிரோடும் அதை அனுபவிக்கும்போது பிரமிப்பாகவும் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. துணைக்கு திஸ்பூரிலிருந்து இரண்டு பேர் வந்திருந்தார்கள். இவர்களின் காமிரா, சமையல் பாத்திரங்களை


அம்மை

 

  நம்ம ஸ்கூல்லதான் படிச்சீங்களாமே? சொன்னாங்க” என்றார் தலைமை ஆசிரியர். நான் சிரித்துக் கொண்டேன். “ஆமா… டென்த் பப்ளிக் எக்ஸாம் வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி நின்னுட்டேன்” அதை உறுதிப்படுத்துவது மாதிரி சொல்லிச் சிரித்தேன். “என்ன அம்மை போட்டுடுச்சா?” தலைமயாசிரியர்களுக்கு யார், யார் எதற்கு விடுமுறை எடுப்பார்கள் என்பதில் ஒரு தீர்மானம் இருக்கத்தான் செய்தது. “நின்னுட்டேன். மறுபடியும் இங்க வருவேன்னு நினைச்சுகூட பார்க்கல” “என்ன கருணாகரன் ஸார். எவ்ளோ பெரிய பிஸினஸ்மேன் நீங்க? இவ்வளவு சாதாரணமா நின்னுட்டேன்னு