Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: தமிழ்மகன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

நியாயச் சங்கிலி

 

  ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென வித்தியாசம் காண இயலாத மங்கோலிய பெண் தரத்தில்தான் வைத்திருந்தேன். அவளுடைய பல்வரிசை அலாதியானது. அவளை அருகே அழைத்து கொஞ்ச நேரம் சிரிக்கச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கலாம்போல இருந்தது. அடுத்தகட்டமாக அந்தச் சிறிய நாசிக்குள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் எப்படி சென்று உருமாறித் திரும்புகிறது என்ற ஆச்சர்யமும் உடன் சேர்ந்து கொள்ளும். சிரிக்க எத்தனிக்கும்போது முன்


ஒரு மரப்பெட்டிக் கனவு

 

  பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது சீதனமாக தந்த பெரிய மரப் பெட்டி அது. அதில் எராளமான துணி மூட்டைகள் இருந்தன. யார் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கு “சின்னதாகிவிட்ட’ ஆடைகள் எல்லாம் அதில் எதற்காகவாவது பயன்படும் என்று எடுத்து வைத்துவிடுவார்கள். சரவணன் தன் பதினாறு வயது அனுபவத்தில் பயன்பட்டதாகப் பார்த்ததில்லை . கொஞ்சம் முக்கியமாக வைக்க வேண்டிய பொருள்களும் அதில் இருக்கும். ஊறுகாய் ஜாடி,


நினைவின் நிழல்

 

  நான் அமைதியாகக் கண் அயர்ந்து இருந்தேன். எனக்கு உயிர் இருக்கிறதா என்பதைப் பலரும் நம்பிக்கையே இல்லாமல் பரிசோதித்துக் கொண்டு இருந்தார்கள். உடலில் ஓர் அசைவும் இல்லை. பத்து குதிரைத் திறன் உள்ள நீர் இறைக்கும் இயந்திரத்தை சுமந்து செல்லக்கூடிய என் தோள்கள் துடைத்துப் போட்ட கரிக்கந்தைபோலக் கிடந்தது. இமையைக்கூட அசைக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நான்கைந்து டாக்டர்கள் நின்றிருப்பதை மிக நீண்ட யோசனைக்குப் பிறகே உணர்ந்தேன். எல்லோருமே நான் பிழைப்பது அரிது என்பதைத் தங்கள் மருத்துவ


இது பாம்புக்கதை அல்ல

 

  ”பாம¢பு ரெண்டு நாளா சாப்பிடல சார்… ஏதாவது தர்மம¢ பண¢ணுங¢க சார்” – பஸ்ஸின¢ ஜன¢னல¢ ஓரத¢த¤ல¢ இருந¢து குரல் வந¢தது. நான¢ த¤ரும்பிக் குன¤ந¢து பார்ப¢பதை அற¤ந¢து, பாம்புகளைத் தவ¤ர வேறு எதையும¢ பத¢த¤ரப¢படுத¢த¤வைக¢க முடியாத அந்தப் பிரத்யேக மூங¢க¤ல¢ கூடையை எனக்கு உயர்த்திப்பிடித்துக் காட்டினான் பாம்பாட்டி. அவன் காட்டிய கூடையில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டு படுத்துஇருந்தது. அவ்வளவு நெருக்கத்தில் இது வரை நான் எந்தப் பாம்பையும் பார்த்தது இல்லை. என் கையில்


ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு நாடகம்!

 

  பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாகக் கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின்போது சீதனமாகத் தந்த பெரிய மரப் பெட்டி அது. அதில் ஏராளமான துணி மூட்டைகள் இருந்தன. யார் வளர்ந்துவிட்டாலும் அவர்களுக்கு ‘சின்னதாகிவிட்ட’ ஆடைகள் எல்லாம் அதில் எதற்காகவாவது பயன்படும் என்று எடுத்துவைத்துவிடுவார்கள். கொஞ்சம் முக்கியமாக வைக்க வேண்டிய பொருள்களும் அதில் இருக்கும். ஊறுகாய் ஜாடி, விநாயகர் அகவல், கார்த்திகை தீபத்துக்கான அகல் விளக்குகள் இப்படி. ஆனால், அதனுள் ஒரு