கதையாசிரியர் தொகுப்பு: தமிழருவிமணியன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

கனவுப்பூ

 

  உயிரை உருகவைக்கும் கோடையின் கொளுத்தும் வெயிலிலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மக்கள் நெரிசலில் மூச்சுத் திணறியது. ”பயணிகளின் கனிவான கவனத்துக்கு…” என்று அறிவிப்பாளரின் குரல் விட்டுவிட்டு ஒலித்தது. மூன்றாவது பிளாட்ஃபாரத்தில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. சி1 ஏ.சி. சேர் காரின் கடைசி வரிசையில் கண்ணாடி ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பார்வதியின் மனம் அமைதி இழந்து அலை பாய்ந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஜோடியிடம் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக உறங்குவதுபோல் விழி மூடிக்கிடந்தாள்.


ஒற்றைச் சிறகு

 

  உலகம் அழிவதற்கான பிரளயம் பெருக்கெடுத்துவிட்டதுபோல் இரவு முழுவதும் பேரிரைச்சலுடன் மழையின் ஊழிக்கூத்து. பெரியவர் குமரேசன் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டு இருந்தார். மாடி அறையின் கூரை மீது மழை விழும் ஓசை, இரவின் அமைதியை அழித்தது. வெறிகொண்ட பேயின் கொடுங்கரங்களால் அறைபடுவதுபோல் சாளரங்கள் சடசடத்தன. தொலைவில் டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம் இடியின் முழக்கமாக எதிரொலித்தது. அடுத்த கணம் மின் விளக்கு அணைந்து அறையில் இருளின் ஆதிக்கம் பரவியது. குமரேசன் எழுந்து அமர்ந்தார். அவருடைய வாழ்வின் கடைசிப்