கதையாசிரியர் தொகுப்பு: தமிழச்சி தங்கபாண்டியன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

களவாணி மழை

 

  முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா… சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை


தொலைந்து போன தூக்கம் !

 

  அந்தச் செய்தியைக் கேட்டபோது… நான் புத்தகக் கடையில் இருந்தேன். கைப்பேசியைத் துண்டித்து, மனசு அதிர அதிர காருக்கு நடந்தேன். ரொம்ப அழுக்கான ஜீன்ஸில், பிராண்டட் டி-ஷர்ட் அணிந்திருந்த அந்த இளைஞன், படு வேகமாகப் பைக்கை உதைத்துக் கொண்டிருந்தான். ”ஹெல்மெட் போட்டுக்கலியா?” என்று கேட்டவாறே அவனைக் கடந்தபோது, கண்களில் துளிர்க்கப் பார்த்த நீரை அடக்கினேன். ‘முன்பின் தெரியாத இந்தப் பெண் நம்மை ஏன் இந்தக் கேள்வி கேட்கிறாள்?’ என்று தோள் குலுக்கியிருக்கலாம் அவன். காருக்குள் உட்கார்ந்த பிறகு,