கதையாசிரியர் தொகுப்பு: தமயந்தி

16 கதைகள் கிடைத்துள்ளன.

ஜ‌ன்னல்

 

  ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌வே மொத்த‌ காம்பெள‌ன்டும் தெரிகிற‌து முப்பிடாதிக்கு. வேப்ப‌ ம‌ர‌ நிழ‌ல் சியாம‌ளா அக்கா வீட்டு சுவ‌ர் மேல் ப‌ட‌ர்ந்து இருக்கிற‌து. சியாம‌ளா அக்கா தூங்கிக் கொண்டிருப்பாள். ம‌த்தியான‌ம் பால்கார‌ன் வ‌ரும் வ‌ரைக்கும் தூங்கிக் கொண்டிருந்து விட்டு, ம‌ணி ச‌த்த‌ம் கேட்ட‌வுட‌ன் த‌லைமுடி க‌லைந்து அரைத்தூக்க‌த்தில் தான் அக்கா பால் வாங்குவாள். ஒரு வ‌ரைந்த‌ ஓவிய‌த்தில் உள்ள‌ பெண் திடீரென‌ ந‌க‌ர்வ‌து போல் அவ்வ‌ள‌வு அழ‌காயிருக்கும் அது. “க்கா..” என்று ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ அவ‌ளைக் கூப்பிட்டு