கதையாசிரியர் தொகுப்பு: தமயந்தி

17 கதைகள் கிடைத்துள்ளன.

அலர்

 

  மழை நாள் ஈரத் துணிகளுக் குன்னே ஒரு வாசனை உண்டு. ஜோதிக்கு அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். ஜோதியும் நானும் ஹாஸ்டல்ல இருக்கிறப்ப, வேணும்னே துணி காயப் போடுற இடமா மூக்கை நுணுக்கிட்டுப் போய் நிப்பா. மழைன்னா, அவளுக்கு உசிர். பல்லவன் பஸ்ல மழை நேரம் ஏறி, கால்ல மிதிபடுறது எனக்குப் பிடிக்காத ஒண்ணு. அவளுக்கு சேறு சகதிலாம் சகஜம். ‘வயக்காட்டு சகதில வளர்ந்தவ நானு… உன்ன மாதிரியா?’ என்பாள். இப்பவும் அலுவலகத்தில் யார் இருந்தாலும்கூட


யானைக் கனவு

 

  விறுவிறுவென அந்த யானை காடுகளுள் மரங்களைப் புறந்தள்ளிவிட்டு நடந்தது. கீழே விழும் மரக்கொப்புகளின் ஒலிகளுள் நகர்கிறது துண்டாய் விழும் வெளிச்சம். யானையின் பிளிறல்கள் எதிரொலிக்கும் திசைகளை என்றும் கண்டது இல்லை நகரங்கள். சரசரவென நகர்ந்தபடி யானை கம்பீரமாகக் காட்டை புறந்தள்ளி முன்னேறுகிறது. இவளுக்குள் யானையின் ஒலி கேட்க, இவள் திடுமென எழுந்து உட்கார்ந்து இருந்தாள். வெயில் மெள்ள யானையின் துதிக்கையாக ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்தபடி இருந்தது. செந்தில் வந்திருப்பான். அறைக்கு வெளியே ஒரு பிரளயமே உருவாகி


தனிமையின் வாசனை

 

  நீளமான தலைப்புகளை வாசித்து மூச்சு இரைத்தது போல்தான் உனக்கும் அவனுக்குமான இடைவெளி நீண்டு கிடக்கிறது. உன் வீட்டு வரவேற்பறையில் சினைகொண்டது போல் ஒரு பல்லி ஓர் எறும்பின் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறது. அலமாரியின் நிழலில் எறும்பைக் காணாமல் திகைத்து நிற்கிறது. எறும்பின் புண்ணியமோ என்னமோ, அதைக் காணவே இல்லை. பார்க்காத ஒரு நொடியில் அந்த எறும்பைப் பல்லி விழுங்கிவிட்டதோ என்றுகூட உனக்குத் தோன்றலாம். சுற்றி உள்ள சந்தோஷங்களில் இருந்து சிலர் சந்தோஷங்களை எடுத்துக்கொள்வார்கள். இருக்குமிடம் எல்லாம்


காற்றின் அலை…

 

  இடைவெளியற்று காற்று வீசினபடி இருந்தது. கங்கா கண்களை இறுக மூடிக்கொண்டாள். அமானுஷ்யம், நேரத்தைக் கடக்கும் கடிகார முள்ளாக அவளைக் கடந்துகொண்டுஇருந்தது. அடர்ந்து பெய்யும் மழை, சிறு திவலைகளாகி உடைந்து பெருக்காய் ஓடிற்று. ‘ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி பாட, மழையில் ரஜினிகாந்த் நனைந்தபடி ஓடி வருவது ஞாபகம் வர, சட்டென்று ஜன்னல் வழி பார்த்தாள். யாருமில்லை. வனாந்தரத் தனிமையில் வானவில் இவளைச் சுற்றிப் பொதிந்துகொண்டது போல்இருந்தது. ”மழை குறைஞ்சுடுச்சு கங்கா, போலாமா?” செண்பகவல்லி எட்டிப் பார்த்தாள். ”போற


இலுப்பைப் பூ ரகசியம்

 

  பண்ருட்டி வழியாகப் போகும்போது காற்றில் சிறகு கட்டி அலைந்த இலுப்பைப் பூவின் வாசம் ஏனோ அமுதாவை நினைவு படுத்தியது. அமுதாவும் நானும் அந்தப் பெண்கள் விடுதியைவிட்டு வெளியேறியது ஒரு துரதிர்ஷ்டம் சார்ந்த சுவாரஸ்யமான அனுபவம். ஓர் அதிகாலையில், எங்கள் அறைக்குள் இருவர் நின்றிருந்தனர்.அன்றைக்கு நான் 12 மணிக்கு மேல் தூங்கியதாக ஞாபகம். எங்கள் அறையிலிருந்த காமாட்சிதான் முதலில் அவர்கள் இருவரையும் பார்த்துச் சத்தம் போட்டாள். அப்போது மணி 1 இருக்கலாம். தொடர்ந்து, அறையிலிருந்த ஆறு பேரும்