கதையாசிரியர் தொகுப்பு: தஞ்சை பிரகாஷ்

2 கதைகள் கிடைத்துள்ளன.

வெட்கங்கெட்டவன்

 

 ரங்கம் நிம்மதியாய் அழுது கொண்டிருந்தாள். வாசல் கதவு சும்மா ஒருக்களித்திருந்தது. மதிய வேளையின் வெய்யில் மணி நாலு ஆகியும் ஜன்னல் வழியே உள்ளே பாட்டம் போட்டு வெளிச்சம் கண்னை கூசியது கோடை வெய்யில் ஆத்திரத்துடன் அழுது கொண்டிருந்தாள். ஒரு பழைய பாவடை அது முழுவதும் கண்ணீரால் நனைந்து சோர்ந்துவிட்டது. அழுவதற்காகத்தானே தஞ்சாவூருக்கு அம்மா வீட்டுக்கு வந்தாள்? இங்கும் வந்து விட்டான் பின்னாலே அப்போது ரங்கத்துக்கு பதிமூணு வயசு யார் கேட்டார்கள் கல்யாணம் வேணுமென்று அவசர அவாரமாய் கல்யாணம்


மேபல்

 

 மேபலுக்கு ரொம்ப பயம். அப்பான்னாலே பயம். அவளுக்கு அப்பா மட்டும்தான் மிச்சம். அம்மா மோனத்திலிருக்கிறாள். கர்த்தரின் மடியில் அம்மா இருக்கிறதை மேபல் பல தடவையும் கனவில் பார்த்திருக்கிறாள். அம்மா ரொம்ப அழகு. சிவப்பு வெள்ளப் பட்டுடுத்தி சம்மனசு மாதிரி கர்த்தரோட மடியில் உட்கார்ந்திருக்கிறதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்பா கறுப்பு! முரடு. திமுசு மாதிரி, புளியமரத்து அடி மரம் மாதிரி கண்டு முண்டா இருக்கிற அப்பாவெ மேபல் குட்டிக்கு எப்படிப் பிடிக்குமாம்? கொஞ்சம்கூடச் சிரிக்காத மனுஷன் உண்டா?