கதையாசிரியர் தொகுப்பு: தங்கம் கிருஷ்ணமுர்த்தி

21 கதைகள் கிடைத்துள்ளன.

துரோணரை பிரமிக்க வைத்த அர்ஜுனன்!

 

  அந்த அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரன் தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தார். ‘‘துரோணாச்சார்யரே… எனக்கு ஒரு சந்தேகம்!’’ என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். ‘‘கேளுங்கள் மன்னா!’’ ‘‘சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?’’ _ திருதராஷ்டிரன் கேட்டார். ‘‘ஆம், மன்னா!’’ _ பதிலளித்தார் துரோணர். ‘‘தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!’’ ‘‘மன்னா… என்ன கூறுகிறீர்கள்?’’ _ திடுக்கிட்டார் துரோணர். ‘‘துரோணரே… பாண்டவர்களையும் எனதருமைப் பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக்