கதையாசிரியர் தொகுப்பு: தங்கம் கிருஷ்ணமுர்த்தி

21 கதைகள் கிடைத்துள்ளன.

காதலியின் கண்களை விட அழகான கண்கள் உண்டா?

 

  ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும் அவர்களால், ‘கோயில்’ என்று சிறப்பிக்கப் படுவதுமான திருவரங்கம். பணியரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாங்காண அணியரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்… என்று கவிச் சக்ரவர்த்தி கம்பரால் போற்றப்பட்ட புராதனப் பதி. ‘அரிதுயில்’ செய்யும் அரங்கன் எழுந்தருளி இருக்கும் அந்த அற்புதப் பதி, அன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்களும் வாழைப் பந்தல்களும் எழிலோடு காட்சியளித்தன. கருட வாகனத்தில் அரங்க ராஜாவின் பிரம்மோற்சவக் காட்சியைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர். தமிழ்


ஜனகரை சந்தேகித்த முனிவர்!

 

  கலை வளமும் கடவுள் பக்தியும் கொண்ட மிதிலை நகரை ஜனக மகாராஜா நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார். ஜனகர் கல்வி கேள்விகளில் தேர்ந்த மேதை. ஞானப் பண்டிதரான இவர், தம் பிரஜைகளிடம் ஏற்றத் தாழ்வு பாராமல், சரிசமமாக பாவித்தவர். இருப்பினும் ஜனகர், உலக விஷயங்களில் பற்றற்று ஒரு துறவி போல் வாழ்ந்தார். எனவே, இவரை ‘ராஜரிஷி’ என்றே அழைத்தனர். ஜனகரின் புகழும், செல்வாக்கும் சுகதேவன் எனும் முனிவருக்குள் பகையுணர்ச்சியையும் பொறாமை யையும் ஏற்படுத்தியது. முற்றும் துறந்த


அரசனை உதைத்த துறவி!

 

  கானகம் ஒன்றில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார். முக்காலமும் அறிந்தவர் அவர். ஒரு நாள் திருமகள் அவர் முன் தோன்றினாள். ‘‘மகனே… முற்பிறவியில் நீ செய்த புண்ணியங்களின் பலனாக, சிறிது காலம் நான் உன்னுடன் தங்கி இருக்க வேண்டியது நியதி. என் அனுக்கிரகத்தால் உனக்கு எந்த விதத் தீங்கும் நேராது. இந்த நாட்டு மக்களும் மன்னனும் உன்னைப் போற்றிப் புகழ்வார்கள்!’’ என்றாள் திருமகள். ‘‘தாயே… புகழ்ச்சி& இகழ்ச்சி, இரண்டையும் சமமாகப் பார்க்கும் பற்றில்லாத துறவி நான்.


அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்!

 

  பாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான். அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது. இதனால், கோபமுற்றான் கர்ணன். மறு கணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர் மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங் கியது. அப்போது


உயிருக்கு போராடிய கர்ணனிடம் தங்கம் கேட்ட கிருஷ்ண பரமாத்மா!

 

  மகாபாரதப் போரில் பலசாலியான கர்ணன் வீழ்ந்துவிட, கௌரவர்கள் தோல்வியைத் தழுவினர். பாண்டவர்கள் பாசறையில் வெற்றிக் கொண்டாட்டம். எல்லை மீறிய உற்சாகம். குதூகலத்தில் பாண்டவர்கள் திளைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ண பரமாத் மாவின் முகத்தில் மட்டும் சோகத்தின் சாயல். பாண்டவர்கள் திகைத்தனர். அர்ஜுனன் அவரை நெருங்கி, ‘‘கிருஷ்ணா, உன் முக வாட்டத்துக்கு காரணம் என்ன?’’ என்று கேட்டான். துயரம் கவ்விய முகத்துடன் அவனை ஏறிட்ட ஸ்ரீகிருஷ்ணர், ‘‘தனஞ்சயா… பராக்கிரமசாலியும், தலைசிறந்த கொடையாளியுமான ஒருவன், இன்று வீழ்ந்து விட்டானே… அதை