கதையாசிரியர் தொகுப்பு: டொமினிக் ஜீவா

11 கதைகள் கிடைத்துள்ளன.

இவர்களும் அவர்களும்

 

 ‘சுந்தரம்ஸ் அன்ட் கோ’வின் பிரதம பங்காளியும்’ மானே ஜிங் டைரக்டருமான ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை அவர் களும், ‘ஆறுமுகம் பிள்ளை அன்ட் சன்ஸ்’ உரிமையாளர் திருவாளர் ஆறுமுகம் பிள்ளை அவர்களும் ஜன்ம விரோதிகள். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். எதையும் குறைத்துச் சொல்வது அவர்களுடைய அந்தஸ்தைக் குறைப்’ பதாகும். அவர்களுடைய விஷயங்களில் எதையும் ‘கோய பல்ஸ்’ பாணியில் பெருக்கிச் சொல்வது தான் முறை. இரு வருக்கும் சமீப காலத்திலேதான் சிறு மனக்கசப்புக் காரண மாகப் பூசல் ஏற்பட்டிருந்தது. இந்த


கரும்பலகை

 

 வகுப்பறையிலிருந்து எழுந்து கொண்டிருந்த சமுத்திர ஆரவாரம் தீடீரென்று கரைந்து, மடிந்து, மறைகிறது. இடுகாட்டின் சலனமற்ற அமைதி – வகுப்பெங்கும் ஆழ்ந்த மௌனம் நிலவுகின்றது. கந்தவனம் வாத்தியார் குமுறும் எரிமலையாய்த் தோன்றுகிறார், அவர் கண்கள் அக்கினிக் கெந்தகக் குழம்பைக் கக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதயத்தினுள்ளே கொதிப்படைந்த உணர்ச்சிக் குமுறல்கள்…கொந்தளிப்புகள், எண்ணப் போராட்டங்கள். “யாரடா இந்தப் படத்தைக் கீறினவன் ? எழுந்து நில்லடா?”-மயானத்தின் மௌனத்தைக் கிழித்தெறிந்த கோடையிடி கேட்கிறது; கேள்விக்கணை ஒலிக்கிறது. ஊசி விழவில்லை : சருகு அசையவில்லை. அசைவற்ற,


ஞானம்

 

 யாழ்ப்பாணம். மூன்றாம் குறுக்குத் தெரு, கிட்டங்கி ரோட்டினைக் கட்டித் தழுவும் சந்தி. அதன் மேற்குப் புறமாகப் ‘பவுண் மார்க்’ ஓட்டுக் கிட்டங்கி. கிட்டங்கியிலிருந்து பத்து கஜ தூரத்தில், தனிமையில்-விரகதாபத்துடன் தவிக்கும் பெண்ணைப் போன்று காட்சி தரும் – முனிசிப்பல் மின்சாரக் கம்பம். அதன் தலைப்பில் மின்மினிப் பூச்சியின் கைவிளக்கேந்தி மினுக்கிக் காட்டும் ‘பல்ப்’. அதன் ஒளிக்கற்றைகள் சக்தி குறைந்தனவாக, மிக மிக மங்கிய வெளிச்சத்தை நிலத்தில் பாய்ச்சுகின்றன. தன் நிழலைக் கால்களுக்கிடையில் மிதித்துக்கொண்டு, அந்தக் கம்பத்தில் ஒரு


முற்றவெளி

 

 “ஹை , ஹை!…த்தா!…த்தா ! சூ…! சூ…!” என்று வாயால் ஓசை செய்த வண்ணம் கையில் பூவரசந் தடியுடன் குறுக்கும் மறுக்குமாக நாற்புறமும் சிதறி ஓடிய மாடுகளை சின்னக் குட்டியன் வரிசைப் படுத்தித் தனது க்ட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரப் பகீரத முயற்சி செய்தான். அவனது அதட்டல்களைப் பொருட்படுத்தாது ஒன்றிரண்டு மாடுகள் கட்டுக்கு அடங்காமல் வீதியில் சிதறி ஓடத்தான் செய்தன. கையிலுள்ள தடியை உயர்த்தி ஓங்கியபடி மீண்டும் கால்களைச் சாய்த்துச் சாய்த்து ஓடினான் அவன். அப்படி ஓடும்போது அவனைப்


சிலுவை

 

 நாவல்களையும் சிறுகதைகளையும் திடுதிப்பென்று ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் அவை விறுவிறுப்பாக வும், சுவாரஸ்யமாகவும் இருக்குமாம். இப்படி யாரோ ஒரு பெரிய எழுத்துப் புலி சொல்லி இருக்கும் அநுபவ இலக்கியத்தில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு; மதிப்புண்டு. ஆனால், இது நாவலல்ல; சிறுகதையுமல்ல -வெறும் கடிதம். ஆமாம், நண்பா! உனக்கெழுதும் கடிதம் தான் இது… இக்கடிதத்தை எப்படி ஆரம்பித்து எழுதுவேன்? உன்னை-என் இதயத்துக்கு மிகவும் சமீபமாக இருக்கும் உன்னை, எப்படி அழைப்பேன்? நேரடியாகவே எழுதட்டுமா? ஆம், அதுதான் சரி.