கதையாசிரியர் தொகுப்பு: டி.குலசேகர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

பப்பாளி மரம்

 

 தனி மரம். யார் இருக்கிறார்கள். பேசிக் கொள்வதென்றால்கூட அவருக்கு அவரே தான். சில சமயங்களில் அந்தப் பப்பாளி மரத்தோடு பேசிக் கொண்டிருப்பார். அது அவருடைய வலி குறித்த பிலாக்கணங்களைத் தினம் கவனத்தோடு கேட்கும். இதமாய் அசைந்து ஆறுதலாய் வருடிக் கொடுக்கும். படபடப்புத் தணிக்கும்படி விசிறி விடும். அவருக்கான பிடிமானமாய் இருப்பது வீட்டுத் தோட்டம் மட்டும்தான். வீட்டிற்குப் பின்னால் இருந்த வெற்றிடத்தில் தோற்று-விக்கப்-பட்ட தோட்டம். இதில் பரவி-யிருக்கும் பசுமையின் பரிட்சயம் போதும். அந்தப் பப்பாளி மரம் பார்த்தீங்களா.. என்னமாய்


சூரியகாந்தி

 

 மதுரை மருத்துவக் கல்லுரி ஆண்டு விழா. நிகழ்ச்சி அரங்கம் பொங்கி வழிந்தது. இளமை-யின் துள்ளலோடு ஆண்களும், பெண்களும் இருந்தார்கள். முதன்மை ஆசிரியர் முதல் மதிப்பெண் எடுத்த நபரை அழைத்தார். அருந்ததி அப்பாவின் உள்ளங்கையில் பிரியமாய் தட்டிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து நகர, அரங்கமே கரவோசையில் அதிர்ந்தது. அருந்ததிக்குள் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கையில் என்னவோ முதல்முதல் நிலாவில் காலடி எடுத்து வைத்த மாதிரி பாதம் பதியக் கூசியது. மேடை சமீபிக்கவும் ஒரு நொடி நிதானித்தாள். பெரிதாய்