கதையாசிரியர் தொகுப்பு: ஜ.ரா.சுந்தரேசன்

75 கதைகள் கிடைத்துள்ளன.

அப்புசாமியின் தாலி பாக்யம்

 

  அப்புசாமிக்குக் கை துறுதுறுத்தது – அரசியல் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது மறியல், பொறியல் செய்ய அவ்வப்போது துடிக்குமே அதுபோல. ஆனால் துடிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. காரணம் அவர் துடைக்க நினைத்து ஓர் இளம் அழகிய பெண்மணியின் கண்ணீரை அதுவும் சீதாப்பாட்டியின் எதிரில் நடக்கிற காரியமா? (அப்புசாமியின் கணக்குப்படி ‘இளம்’ என்பது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து அகவைக்குட்பட்ட பருவத்தினர்,) வந்த பெண்மணியின் பெயர் மிஸ் துளசி. நிறமும் நல்ல சி(வப்பு). கட்டவுட்டான சரீரம். பெட்டியிலே வந்து இறங்கிய பெரிய


அதிரடிக் குரலோன் அப்புசாமி

 

  ஆறாத சுடச்சுட பொங்கலை ஆற அமர அமர்ந்து அப்புசாமி ஒரு வாய் எடுத்துச் சுவைத்திருப்பார். “ஸைலேன்ஸ்!” என்ற மாபெரும் கத்தல் அவரைத் தூக்கிவாரிப்போட வைத்தது. அவரை என்பதைவிட அவர் கையிலிருந்த பொங்கலை. அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பொங்கல் பொட்டலம் துள்ளி மண்ணில் விழுந்து புரண்டது. ஐயோன்னா வருமா, அப்பான்னா வருமா? சுண்டலாக இருந்தாலும் பொறுக்கி எடுத்துத் துடைத்துக் கிடைத்து, குழாய்த் நீரில் அலம்பிக் கிலம்பி, உலகத் தமிழ் மாநாட்டுத் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் போல் தட்டுத்


தேள் அழகர் அப்புசாமி

 

  கீழ் வானில் பெளர்ணமி சந்திரன் சோளா பட்டூரா மாதிரிப் பெரிசாகக் காட்சி தந்தது. நட்சத்திரங்களே சென்னா, நீலவானமே அவைகளை ஏந்தும் பிளேட். அழுக்கு மேகமே லாலா கடை சப்ளையர், ஆனால் அப்புசாமி காளிதாச மனோநிலையில் இல்லாததால் சந்திரனை ரசிக்காமல் மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி பாத்ரூம் போய் வந்தார். பாத்ரூம் போனாரே தவிர பாத்ரூம் போகவில்லை. அதாவது ஒன்று(ம்) செய்யவில்லை, ஒருகால் போனோமோ என்று குழம்பினார். அங்கே விளக்கை அணைக்காமல் வந்து விட்டோமோ? சீதேக் கிழவி


மாண்புமிகு அப்புசாமி ஒன்லி

 

  அப்புசாமிக்கு உற்சாகம் ‘பொங்கலோ பொங்கல்’ என்று பொங்கியது. ‘இன்பத் தேன் வந்து பாயுது கண்ணினிலே’ என்று பாட வேண்டும் போலிருந்தது. ஹோட்டலில் நெய் தோசை என்ற பெயரில் கொண்டுவந்து தரப்படும் மாபெரும் வறண்ட மாவுப் பரப்பில் அசல் நெய் வாசனையே அடித்தால் என்ன ஆனந்தம் ஏற்படுமோ, அதைப் போல நூறு மடங்கு குதூகலம் ஏற்பட்டது. கையிலிருந்த முகவரியை இடைவிடாது படித்தார். ஒருநாள் விட்டு ஒருநாள் நீர் வருகிற மாதிரி, இடைவெளி விட்டு இடைவெளி விட்டு சொட்டுச்


சதி பதி நிதி

 

  இரண்டு நாளாக சீதாப்பாட்டி கழகத்துக்குப் போகவில்லை. காலை வாக்கிங் கிடையாது. ஈ-மெயில்களை ஓபன் பண்ணவில்லை. சினேகிதக் கிழவிகள்கூட யாரும் வரவில்லை. பகலிலேயே மேஜை விளக்கைப் போட்டுக்கொண்டு ஒய்யாரமாகப் படுத்தபடி அவளுக்குப் பிரியமான  ரீடர்ஸ் டைஜஸ்ட்டைப் படிப்பாளே, ஊஹ¥ம்… தபாலில் வந்த உறை பிரிக்கப்படாமல் டீபாய் மீது கிடந்தது. சமையல் என்ற பெயரில் எதையாவது அலட்சியமாகச் செய்து வைப்பாளே, அதுவும் இல்லை. பா.மு.க. நடத்தும் ‘எமர்ஜென்ஸி மீல்ஸ்’ பிரிவிலிருந்து காரியர் சாப்பாட்டை யாரோ கொண்டு வந்தார்கள். டெங்கு