கதையாசிரியர் தொகுப்பு: ஜ.ரா.சுந்தரேசன்

75 கதைகள் கிடைத்துள்ளன.

ஐயோ பாவம் டி.வி. பெட்டி

 

  நண்பன் அனந்தமூர்த்தி வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே கண்ட காட்சி என்னைப் பிரமிக்க வைத்தது. கத்திரி வெய்யில் கூட அவ்வளவு படுத்தாமல் போய் விட்டதே, நண்பருக்கு என்ன ஆச்சு? தடுக்க முயன்றேன். “விடுப்பா என்னை? தடுக்காதே. நீயும் வீணாக அடிபடுவே… நகரு..” மூர்க்கத்தனமாக இருந்தான். கையில் பெரீய கொட்டாப்புளி சுத்தி. எங்கிருந்தோ வாடகைக்கு வாங்கி வந்திருக்க வேண்டும். வீட்டுக்கு எதிரே அடுக்கு மாடி உருவாகிக் கொண்டிருந்தது. கட்டுமானக் கம்பிகளை வெட்டும் பயங்கர சுத்தி அங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும்.


ஸெல்லின் செல்வர் அப்புசாமி

 

  அப்புசாமி மட்டும் ஒரு தீவிர கட்சித் தொண்டனாக இருந்திருந்தால் நிச்சயமாக மனைவி சீதாவின் புகைப்படத்தை எல்லாச் செய்தித் தாள்களிலும் குறைந்த பட்சம் அரைப் பக்கத்துக்காவது போட்டு, ‘ஒலி கொடுத்த தெய்வமே! ஒப்பில்லா மணியே! ஸெல்லு கொடுத்த ஸெகதீஸ்வரியே! என் காது உன் காலில் அம்மா! நீயே இல்லத்தரசி! நீயே ஸெல்லுத்தரசி! இவண் உன் ஊழியனும் கணவனுமான ஸெல்லுசாமி (பழைய பெயர் – அப்புசாமி) என்று புகழ்மாலை சூட்டியிருப்பார். பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு அவருக்கு வசதி


முறுக்கிக் கொண்டார் அப்புசாமி

 

  பா.மு கழக அங்கத்தினர்கள் ஸ்பெஷல் பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு சாத்தனூர்க்கு உல்லாச பயணம் புறப்பட்டு போயிருந்தனர் சீதாப்பாட்டி பிரசிடெண்டாயிற்றே. கூடப் போகாமல் இருப்பாளா? அப்புசாமியின் காப்பிச் செலவுக்குக் காசு வைக்காமல் போய்விட்டாள். அப்புசாமி பல்லை கடித்துக்கொண்டு காப்பி போட தொடங்கினார். இரண்டாவது நிமிடமே கட்டை விரலைச் சுட்டுக்கொண்டு, சிறிது மெக்ஸிகோ நடனம் ஆடித் தீர்த்தார். வயிறு பசிக்கவும் வலை பீரோவை திறந்து பார்த்தார். எட்டணா சில்லறை மட்டும் ஒரு டப்பாவில் போட்டுவைத்திருந்தது. ஒரு


அப்பளம் சதுரமானது

 

  “என்ன ஓர் அலட்சியமிருந்தால் நீ இப்படிச் செய்து இருக்கவேண்டும்? அதை எத்தனை வருஷமாக வைத்திருக்கிறேன் தெரியுமா? உன்னுடைய டைஜஸ்ட் பத்திரிகைகளைப் பதிலுக்குப் பதில் நான் இதே பாய்லரில் போட்டுச் சுடச்சுட வெந்நீர் காயவைத்துக் குளிக்கவில்லையானால் என் பெயர் அப்புசாமி இல்லை” என்று கோபமாகச் சூளுரைத்தார் அப்புசாமி. அவரது வாக்கிங் ஸ்டிக்கை, ஏதோ சாதாரணக் கோலென்று நினைத்து, தவறுதலாகப் பாய்லரில் போட்டுவிட்டிருந்தாள் சீதாப்பாட்டி. அப்புசாமியின் கோபத்துக்குக் காரணம் அதுவே. “ஆயிரத்தெட்டு முறை ‘ஸாரி’ சொல்லி அபாலஜி கேட்டுவிட்டேன்.


சிதெய்ங் அப்புங்சாம்ங்

 

  ‘கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ என்று சீதாப்பாட்டியின் கண்கள் அப்புசாமியை வினவின எரிச்சலுடன். வேறொன்றுமில்லை. அப்புசாமி வழக்கமாகத் தான் படிக்கும் தமிழ் தினசரியைப் படிக்காமல் ஆங்கிலப் பேப்பரைத் தரையில் தாள் தாளாகப் பரத்திக் கொண்டு அதன் மேலேயே ஏறக்குறைய தவழ்ந்தவாறு செய்திகளை மேய்ந்து கொண்டிருந்தார். பேப்பர் கசங்கி இருந்தால் சீதாப்பாட்டிக்குப் படிக்கவே பிடிக்காது. பாட்டி பல்லைக் கடித்துக்கொண்டு. “நான் இன்னும் பேப்பர் பார்க்கவில்லை. அதற்குள் யாரைக் கேட்டுக் கொண்டு எடுத்து இப்படி மர்டர் செய்கிறீர்கள்?”