கதையாசிரியர் தொகுப்பு: ஜ.ரா.சுந்தரேசன்

75 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு விஷயமாக!

 

  ‘வாழ்க்கை என்பது சஸ்பென்ஸ்களின் தோரணம்!’ என்ற பொன்மொழியை எங்கோ, எதிலோ படித்திருக்கிறேன். நூற்றுக்கு நூறு அந்தப் பொன்மொழி சரியே! மறுக்கிறவர்கள் தயவு செய்து டி.வி&யில் வரும் மெகா சீரியல் களைப் பார்க்கவும். ஒவ்வொரு எபிஸோடின் இறுதியிலும் ஏதாவது ஒரு சஸ்பென்ஸ் கட்டாயம் இருக்கும். அது சாதா சஸ்பென்ஸாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அது கூட நமது ஆவலை எக்கச்சக்கமாகத் தூண்டிவிட்டு விடும். உதாரணமாக, ஒரு ஆட்டோவில் இளம் பெண் ஏறுகிறாள். ஆட்டோக்காரர் அவளைத் திரும்பிப் பார்க்கிறார். தொடரும்.


என் இடுப்பில் ஒரு கம்பளிப்பூச்சி!

 

  உறுத்தறதை அவர்கிட்டே சொல்லிடலாமா? இதுவரைக்கும் அவர்கிட்டே நான் எதையுமே மறைச்சதில்லை. ஆனா, எங்க மாமி ஒருத்தி சொல்லுவா, சிலதை மறைக்கறதிலே தப்பில்லே… சிலதை மறைச்சுத்தான் ஆகணும்னு! அந்த ரெண்டிலே இது எந்த ரகம்னு புரியலே! படவா, அவனைச் செருப்பைக் கழட்டி அடிக்கணும் போல ஆத்திரம் ஆத்திரமா வருது! அவனும் அவன் கொள்ளிக் கண்ணும்! ஒரே வார்த்தை… ‘அவர் வெளியிலே போயிருக்கார். எப்ப வருவார்னு தெரியாது. நீங்க அப்புறம் வேணா போன் பண்ணிக் கேட்டுட்டு வாங்க’னு பட்டுக்


மாறாதவர்கள்!

 

  காசியை எப்படி நான் வெறுப்பேன்? அவனது முழுப் பெயர் தெரிந்த பின்னும்கூட நான் விரும்பவே செய்தேன். என் சர்க்கரைக்கட்டி, என்னைக் கடைத்தேற்ற வந்த கடவுள் என்றுகூட நினைத்துக் கொண்டேன். கம்ப்யூட்டரில் ஹோம் பேஜ் எதனாலோ சுருங்கித் தொலைத்து நாலு பக்கமும் வெள்ளை வெளேர் என்றாகி, நடுவில் சின்ன கித்தான் டாப் மாதிரி தொங்கிக்கொண்டு இருக்கிறதே என்று நெடு நாளாக கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது, அவனல்லவா வந்து ‘அறு நூறுக்கு எட்டு நூறுதானே’என்று அநாயாசமாக அம்பை அங்கும் இங்கும்


தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!

 

  அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம். பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன தங்கள் மூக்குக் கண்ணாடிகளைத் தாங்களே தேடிக்கொள்ள வக்கத்து, வெட்கமில்லாமல் பெண்டாட்டிமார்களின் உதவியை நாடுவார்கள். அப்போது, மனைவியின் மூடு நன்றாக இருந்தால்–தான் ஆச்சு! ‘இங்கேதானே வழக்கமாக வைப்பீங்க..?’ என்று அனுதாபத்தோடு, நமது தேடும் முயற்சிக்கு உதவுவார்கள். அல்லது, உதவுவது போல நடிக்கவாவது செய்வார்கள். ஆனால் பெரும்பாலான சமயங்களில், முக்கியமாக பெண்கள் டி.வி. சீரியலில் மூழ்கியிருக்கும்போது தேடும்


ஒரு ராஜ பேனாவின் கதை!

 

  (கவித்துவமான தலைப்பு மாதிரி இருக்கிறதல்லவா? சூட்சுமமாக எதையோ மறைமுக மாக உணர்த்துவது போல் தோன்றுகிறதல்லவா? ஏமாந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அசல் பேனா பற்றிய கதைதான் இது!) எனது பேனாக்களுக்குள் கடந்த சில நாட்களாகவே ஒரு பனிப் போர், பொறாமைப் போராட்டம் நடந்துவருவதை என்னால் ஊகிக்க முடிந்தது. சில கூட்டுக் குடும்ப வீடுகளில் ஓரகத்திகளுக்குள் எப்போதுமே ஏதாவது போட்டி பொறாமை உணர்ச்சிகள் இருந்து வரும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் செய்கைகளிலேயே