கதையாசிரியர் தொகுப்பு: ஜ.ரா.சுந்தரேசன்

75 கதைகள் கிடைத்துள்ளன.

சுண்டல் செய்த கிண்டல்

 

  சீதாப்பாட்டி அப்புசாமியின் பாதங்களைப் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். பத்துத் தினங்களாக அப்புசாமியின் பாதங்கள் பன் ரொட்டி போல் வீக்கத்துடன் காட்சி அளித்ததே காரணம். சீதாப் பாட்டிக்கு யானை என்றால் பயம். அதிலும் முக்கியமாக யானைக்கால் என்றால் யானைக்குப் பயப்படுவதைப் போல் நாலு மடங்கு பயப்படுவாள். யானைக்கே யானைக்கால் வந்தால் கூட சிகிச்சை செய்யக் கூடிய ஒரு ‘எலிபண்டயாஸிஸ் ஸ்பெஷலிஸ்ட்’டிடம் சீதாப்பாட்டி அப்புசாமியை கூட்டிப் போனாள். அவர் சிரித்துவிட்டு, “இந்த வீக்கத்துக்குக் காரணம் நீர்” என்றார். “ஐயோ


பிறந்த நாள்

 

  அப்புசாமியைப் போன்ற துரதிருஷ்டக் கட்டையை எந்தக்       காட்டில்  தேடினாலும் சரி, விறகு டிப்போவில் தேடினாலும் சரி, கண்டுபிடிக்க இயலாது. விடிந்தால் அவரது எண்பத்து மூன்றாவது பிறந்த நாள். அப்புசாமி தன் பிறந்த நாள் பற்றிய இன்பக் கற்பனைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் சீதாப்பாட்டி ஒரு பெரிய ‘கோபால்ட்’ குண்டைத் தூக்கி அப்புசாமியின் இனிய கற்பனைகளில் போட்டாள். “அடி! கைகேயி!” என்று இரண்டே வார்த்தைகளில் தன் ஆத்திரம் முழுவதையும் வடித்துவிட்டு, ‘உனக்கு இது அடுக்குமா? வேண்டாம் இந்த அநியாயம்.


பார், பார்! சிபாரிசு

 

  எந்தச் சங்க இலக்கியத்துக்கும், எந்த இருபதாம் நூற்று¡ண்டு இலக்கியத்துக்கும் கட்டுப்படாத ஒரு புது தினுசான கூத்தை ஆடிக் கொண்டிருந்தார், அப்புசாமி. “ஒய் இஸ் திஸ் ஓல்ட் மான் ஜம்ப்பிங்!” என்று சீதாப்பாட்டி, அப்புசாமி காதுபட முணுமுணுத்தாள். அப்புறம் உற்று நோக்கியபோது, அப்புசாமியின் கையில் ஒரு கடிதம் இருப்பது தெரிந்தது. ‘இந்திய ஜனாதிபதி இவரை ஏதாவது திடீரென்று பத்ம பூஷண், பத்ம விபூஷண் அல்லது பாரத ரத்னா பண்ணிவிட்டாரோ?’ சீதாப்பாட்டி கொஞ்சம் தன்னைக் குழப்பிக் கொண்டாள். பிறகு,


விடாப்பிடி

 

  “எனக்கு ஏதாவது லெட்டர்ஸ் உண்டா?” என்று அப்புசாமியைச் சீதாப்பாட்டி விசாரித்தாள். அவர் ஒரு இன்லண்ட் லெட்டரைத் தப்பாகக் கிழித்துவிட்டு, எதை, எந்தப் பகுதியோடு இணைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தார். “எப்போதும் உங்களுக்கு ‘ஹேஸ்ட்’ தான். இப்படி தாறுமாறாகவா கிழிப்பது?” என்று அதை வாங்கிச் சரிசெய்து படித்தவள் அடுத்த கணம், “ஆ! கெட்டது குடி!” என்று கூவியவாறு சோபாவில் இடிந்துபோய் உட்காந்துவிட்டாள். மலை குலைந்தாலும், நிலைகுலையாத தன் மனையாட்டியைக் கலகலத்துப் போய் உட்கார வைத்த


அலங்காநல்லூர் அப்புசாமி

 

  “கொம்பைச் சீவறானா? எதுக்குடா, ரசம்?” பதறினார் அப்புசாமி.   ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந்தேகம் கேட்டான். “ஏன் தாத்தா, ‘வீர’வுக்கு ‘ற’ வா? ‘ர’ வா?” இலக்கணப் பிழை பற்றிக் கவலைப்படும் நிலையில் அப்போது அப்புசாமி இல்லை. இலக்கணம் பிழைக்கிறதோ இல்லையோ, தாம் உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார். “கொம்பை ஏண்டா சீவறான்? அதைச் சொல் முதலில்.” ரசகுண்டு கையிலிருந்த பெயிண்ட்டிங் பிரஷ்ஷைத் தூக்கி எறிந்துவிட்டுக் கோபத்துடன் அவரருகே வந்தான். “வேலை