கதையாசிரியர் தொகுப்பு: ஜ.ரா.சுந்தரேசன்

75 கதைகள் கிடைத்துள்ளன.

காலட்சேப பவன்

 

  ஆவியில் மூன்று வகை – கெட்ட  ஆவி, நல்ல ஆவி, கொட்டாவி. மூன்றாவது வகை ஆவி அப்புசாமியிடமிருந்து அடுத்தடுத்துப் பிரிந்துகொண்டிருந்தது. வளசரவாக்கத்தில் உற்சாகமான சில இளைஞர்களும், அவர்களைவிட அதிக உற்சாகமுள்ள சில வயசானவர்களும் சேர்ந்து ‘காலட்சேப பவன்’ என்னும் நவீன சபா ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். அதனுடைய முதலாவது ஆண்டு விழா பற்றிய விவரம் தினசரிப் பத்திரிகை ஒன்றில் ஓசி காலத்தில் கால் அங்குல இடத்தில் இரண்டு வரி பிரசுரமாகியிருந்தது. சபாக்காரர்களுக்கு எதிலும் புதிய கண்ணோட்டம். ஆகவே


ஜெய் கார்கில்!

 

  இரவு ஒண்ணரை மணிக்கு அப்புசாமியின் படுக்கை காலியாயிருந்தது. அவரது அறையிலிருந்த கொசுக்கள் பின்வருமாறு பேசிக் கொண்டன: எருமைக் கொசு: எங்கே தொலைஞ்சான் ஆசாமி? நான் சரியாவே இன்னும் கடிக்கலை? செரியான சாவு கிராக்கி. குஞ்சுக் கொசு: திட்டாதீங்க பெரீயப்பா. நாங்களெல்லாம் வாய்க்குள்ளே புகுந்து வெளையாடினாக்கூட ஒண்ணும் செய்யமாட்டார். பொளந்த வாய் பொளந்தபடி தூங்குவார். செடிக் கொசு: கொசு மருந்து, கொசு மேட் அது இதுன்னு வெச்சுகிட்டு அவரோட சம்சாரம் நம்மை விரட்டறா. ஆனால் இந்த ஆசாமியின்


அப்புசாமியும் அழகிப் போட்டியும்

 

  அப்புசாமிக்கு அவசரமாக மூன்று கூடை அழுகல் தக்காளியும், இரண்டு கூடை அழுகல் முட்டையும், ஒரு கூடை காது அறுந்த செருப்புகளும் தேவைப்பட்டன. மாம்பலத்தின் கசகச காய் மார்க்கெட்டில் தக்காளி செல்வரங்கத்தின் ஹோல்ஸேல் தக்காளி மண்டியில் பேரம் செய்து கொண்டிருந்தார். “நல்லா அழுகியிருக்கணும் கூடைக்கு அஞ்சு, பத்து அதிகம் கேளு, குடுத்துடறேன். ஆனால் தக்காளி சும்மா கப்பெடுக்கணும். ஆமாம், “என்றார். “எதுக்கு சாமி அவ்வளவு அழுகின தக்காளி? ஓட்டல் எதுனா வெச்சிருக்கியா?” என்று செல்வரங்கம் விசாரித்தான். “அதையெல்லாம்


கனவுமாமணி அப்புசாமி

 

  அப்புசாமி இரண்டு மூன்று நாளாகவே மனைவியைப் பலவிதமான கோணங்களில் எட்ட இருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் கவனித்துக் கொண்டிருந்தார். “வாட் ஹாப்பண்ட் டு யூ… ரெண்டு நாளாக உங்கள் பார்வையே சரியில்லை. எதையோ பார்த்துப் பயந்துகிட்ட மாதிரி முழிக்கிறீர்கள ?” என்றாள் சீதாப்பாட்டி. “என்னவாவது வம்புகிம்பிலே மாட்டிக் கொண்டிருக்கிறீர்களா? யாருக்காவது பைசா தரணுமா?” அப்புசாமி தலையை இல்லையென்று ஆட்டினார். “ஒண்ணுமில்லே… வந்து வந்து… ஒரு பயங்கரக் கனா கண்டேன்… ஆனால் அந்தக் கனவை அமிதாப்பச்சன் மாதிரி கோடி


ஒரு ராதையும் ஒரு ராவணனும் அப்புசாமியும்.

 

  அப்புசாமிக்கு அபூர்வமாகத்தான் டெலிபோன் கால் வரும் அந்த அபூர்வத்தையும் சீதாப்பாட்டி அவரிடம் சொல்ல மறந்து விடுவாள். இரண்டு நாள் கழித்துச் சாவகாசமாக, ‘உங்களை யாரோ டெலிபோனிலே டே பி·போர் யெஸ்டர் டே கூப்பிட்டாங்க. சொல்ல மறந்து விட்டேன்,’ என்று மேட்டர் ஆ·ப் ·பேக்டாகச் சொல்வாள். அந்த அறிவிப்பில் ஒரு ‘ஸாரி’ யோ, மிடியோ, மினியோ எதுவும் இருக்காது. மனைவியின் அராஜக, அலட்சிய, அகங்கார, அக்கிரம, அநியாய, அழிச்சாட்டிய மனப்போக்கு அவருக்குப் பழகி விட்டது. அன்றைய தினம்