கதையாசிரியர் தொகுப்பு: ஜே.வி.நாதன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதனும் ஒரு மாடர்ன் ஆர்ட்தான்!

 

  வளைவு வளைவாகச் சில கோடுகள்; மேலே வைணவர்கள் நெற்றியில் கானப்படும் பட்டை நாமம். இப்படி ஒரு ஓவியம். சுமார் பத்துப் பேர் ஓவியத்தின் முன் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் “ஹா!”என்றார்; இன்னொருவர், “அடடா!” என்று பிரமித்த பாவனையில் முகத்தில் வியப்பு காட்டினார். ஆறுமுக நாவலர் மேனிலைப் பள்ளி வாளாகத்தில் ஓவியர் முனிரத்தினமும் அவருடைய மாணவர்களும் நடத்திய ஓவியக் கண்காட்சி அது. ஒரு வாரமாக ஊரில் மூலை முடுக்கெல்லாம் ஃபிளெக்° பேனர்கள் நின்று அந்த


நான் இன்னும் குழந்தையாம்…

 

  அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும் எதிர் பார்க்கிறார்கள். நீங்கள் வேலைபார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் கிராமத்துக்கு வர விரும்புகிறேன். உங்கள் காலடியில் விழுந்து கதற வேண்டும்போல் இருக்கிறது. நான் வேலை பார்க்கும் கல்லூரியின் நிர்வாகி இந்த வருடம் என் டிபார்ட்மெண்ட் நல்ல தேர்வைக் காட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனால் எனக்கு நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. நான் அங்கு


நெஞ்சில் ஒரு முள்

 

  “நீட்டு கையை!” பாலா பயந்தபடி கையை நீட்ட, படீரென்று பிரம்பால் ஒரு அடி. இடது கையை நீட்டச் சொல்லி இன்னொரு அடி. பாலாவின் கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள, தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன் மீதே ஆத்திரம் எழுந்தது பத்மாவதிக்கு. நூற்றுக்கு ஐம்பது மதிப்பெண்ணுக்குக் கீழ் வாங்குகிற மாணவிகளைக் கண்டிப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தொண்ணூறு மதிப்பெண் பெற்ற சிறுமி பாலாவைத் தண்டிப்பது என்ன விதத்தில் சரி? “தொண்ணூறு மார்க்


ஒருநாள்… மறுநாள்…

 

  என் வீடு உள்ள தெருவுக்கு அடுத்த தெருவில், சாலை ஓரமாக இருந்தது அந்த வேப்ப மரம். என் அலுவலக நண்பர் விக்ரம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி சாலையின் எதிர்ப்புற டீக்கடையிலிருந்து கையில் ஒரு டீ கிளாஸுடன் சாலையைக் கடந்து வந்து கொண்டு இருந்ததைப் பார்த்தேன்.. மரத்தடியில் சுருண்டு படுத்திருந்த அவர் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை போலும்… திடீரென்று டயர் தேயும்


பழையன கழிதலும்…

 

  வீரணம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அன்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. புது மெடிகல் ஆபீசர் வந்து டியூட்டியில் சேரப் போகிறார். தாராபுரம், திருப்பூர், காங்கேயம் – மூன்று ஊர்களுக்கு நடுவில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அந்தக் கிராமம் அமைந்திருந்தது. சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு அந்தக் குட்டி ஆஸ்பத்திரியை விட்டால் வேறு நாதி கிடையாது. இருந்தும், பஸ் போக்குவரத்து வசதி ரொம்பக் கம்மி. மேட்டூரிலிருந்து கிளம்பி, ஈரோடு, சென்னிமலை காங்கயம் நகர்களைத் தாண்டி பழநிக்கு வீரணம்பாளையம்