கதையாசிரியர் தொகுப்பு: ஜே.பி.சாணக்யா

1 கதை கிடைத்துள்ளன.

அமராவதியின் பூனை

 

 ரசாக்கின் வீட்டில் பூனைகள் மிகுந்துவிட்டன. கூடத்தில் மல்லாந்து படுத்தபடி சமையல் புகையில் கறுப்பாகிவிட்ட உள் கூரையை வெறித்துக் கிடந்தான் அப்பூனைகள் பெருகுவதற்கு அவன் மனைவி அமராவதிதான் காரணம். அவள் தான் மிகப் பிரியமாக ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அதன் பிள்ளைகள் தான் தற்போது அவன் வீட்டில் பெருகிக் கிடப்பது. அவன் ஒருநாள் மேல் சுவரில் எட்டிப்பார்த்து எண்ணியும்கூட அவனால் அப்பூனைக்குட்டிகளை எண்ணிக்கையோ அடையாளமோ வைத்துக்கொள்ள முடியவில்லை. தனிமை அவனைச் சூழ்ந்து கிடந்தது. அமராவதி இருக்கும் வரை