Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: ஜே.செல்லம் ஜெரினா

16 கதைகள் கிடைத்துள்ளன.

நிறம் மாறும் மனசு!

 

  “”அய்யா உங்களைப் பார்க்க ஒரு அய்யா வந்திருக்காக… மேனேஜர் அய்யா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாங்க…” என்ற காமாட்சியின் பின்னாலேயே நடந்தார் அவர். “”அய்யா கிட்ட ஒண்ணு கேட்கலாமுங்களா” “”கேளேன் காமாட்சி” “”ஏன்யா, நீங்க இந்த இல்லத்தை விட்டுட்டுப் போறீங்களாமே… நிஜமா…” அவர் சிரித்துக் கொண்டே, “” நீ சொல்லு காமாட்சி இருக்கட்டுமா… போகட்டும்மா?” “”நீங்க தா முடிவு பண்ணனும். ஆனா, ஒண்ணு, நீங்க இல்லைன்னா… இந்த இல்லத்துலே… இந்த இல்லத்துலே…” என்று எதையோ


பூங்சிறகுகளின் உயிர்ப்பு!

 

  அந்த பிரபலமான, “டிவி’ சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின் போக்கில் கவனமாக இருந்தாள். இந்த முறை, “டாபிக்’கே வித்தியாசமானது. திருநங்கைகள், தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்பும், முன்பும், சம்பந்தப்பட்ட குடும்பத்தாரின் உணர்வுகள், பிரச்னைகள், நடவடிக்கைகள் – இது தான் கான்செப்ட். நிகழ்ச்சி சூடு பிடித்துக் கொண்டிருந்தது. இதோ… இதோ… மைக், சரவணமுத்துவிடம் வந்து விட்டது. மைக்கை கையில் வாங்கியதுமே, அவன் கதற ஆரம்பித்து


புதியதோர் ஆரம்பம்!

 

  மொபைல் போன் கதறியது; ஓடிவந்து எடுத்தாள் தாமரை. “”ஹலோ தாமரை… வீட்டுல தானே இருக்க?” “”ஆமாண்ணே… சொல்லுங்க.” “”ஒண்ணுமில்லே… பசங்க ஸ்கூல்லே என்னவோ பிரச்னையாம், போன் வந்தது. நான் குழந்தைகளை அழைச்சிட்டு வந்திடறேன். வீட்லயே இரும்மா.” “”என்னண்ணா பிரச்னை?” “”வந்து சொல்றேன்,” போன் கட்டாகி விட்டது. “என்ன பிரச்னையாயிருக்கும்! கும்பகோணம் தீவிபத்து மாதிரி, அய்யோ…’ அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. மீண்டும் போன்; கணவரின் நம்பர் ஒளிர்ந்தது. “”ஹலோ… என்னங்க.” “”தாமரை… நான் ஸ்கூலுக்கு போய் குழந்தைகளை


காதல் என்பது காவியமானால்…

 

  “அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு…’ என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின. சுயபச்சாதாபத்தில் மனசு சுருங்கியது. தன்மேலேயே எரிச்சலும், கோபமும், “சுறுசுறு’ என்று எழுந்தது. “ச்சே… எத்தனை மோசமான ஜென்மம் நான். அவர் அத்தனை சொல்லியும் கூட, அதைக் காதிலேயே வாங்கல்லையே… அம்மா, அண்ணன் எல்லாரும் தான், தலைப்பாடா அடிச்சுக்கிட்டாங்க… “அவசரப்படாதே… வேண்டாம்’ன்னு, நான் எங்க கேட்டேன்? “ஆத்திரம் கண்ணை மறைச்சுது… எனக்கு கர்வம். “நான், கறந்த பால்


சில நேரங்களில் சில தீர்ப்புகள்!

 

  “”ஏங்க… நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே… கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன்? பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,” என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம். “”என்னடி பேசுற… அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா?” “”நாம ஏங்க தெருவுக்கு போறோம்… நாம பெத்த புள்ளங்க; நம்மள காப்பாத்துவான். புள்ளை, படாத பாடு படறான்… நாயா