கதையாசிரியர் தொகுப்பு: ஜெ.ரகுநாதன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்

 

  நானும் சந்திர சேகரும் சேலம் பிளாட்பாரம் முழுவதும் நடந்து, கும்பகோணம் டிகிரி காபி வேண்டாம் என்று முடிவெடுத்து வெளியே வந்து காத்திருந்த காரில் ஏறி அடுத்த ஒரு மணி நேரம் நாமக்கல் அடையும் வரை பேசிக்கொள்ளவே இல்லை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரசில் போயிருக்கிறீர்களா? நல்ல நட்ட நடு மத்யானம் சென்னையில் கிளம்பி ஒரு நாள் முழுக்க விரயம் பண்ணிவிடும் வண்டி அது. ஆனால் முதல் நாள் இரவு நைட் ஷோ போயிருந்தீர்களானால் அது நல்ல ஆப்ஷன்.


கென்சிங்டன் 1931 வெள்ளை கடிகாரம்

 

  அது 1879 இல் செய்யப்பட்ட சுவர் கடிகாரம் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது.. இங்கே அல்ல, இங்கிலாந்தில். கடிகார முகத்திலேயே Kensington Station என்றுகொட்டை எழுத்தில் எழுதியிருக்கிறது. கூடவே London என்று வேறு. ஒரு வேளை நம்ம மூஸா தெருவிலேயே ஏதோ ஒரு காதர் பாய் செய்து விட்டு இந்த மாதிரி எழுதி வைத்துவிட்டாரோ என்கிற சந்தேகத்துக்கு இடமில்லாமல் அது இன்னும் துல்லியமாக ஓடிக்கொண்டிருக்கின்றது! Black Metal என்னும் உலோகத்தில் ஆங்கில “L” வடிவம் கண்ணாடி


சாருபாலா

 

  (இந்தக்கதை பற்றிய ஒரு முக்கிய குறிப்பு. இருக்கிறது. அதை இப்போது சொல்லலாமா அல்லது கடைசியிலா என்று யோசித்ததில், கடைசியில் சொல்வது நல்லது என்று படுகிறது) இன்றைய ஹிந்து பேப்பரில் அந்த போட்டோவில் அது கணபதியே தான். அந்த உருண்டை முகம், பட்டையான விபூதிக்கு நடுவில் குங்குமம், அசௌகரியமாக அணிந்த பாண்ட். இந்த முப்பத்திச்சொச்சம் வருஷத்தில் முகம் மாறவே இல்லை, அந்த குழந்தைத்தனம் அப்படியே உறைந்தார்போல இருந்தது. SSLC படிக்கும்போது எப்போதும்போல் விவேகானந்தன் சார் கிளாசுக்காக ஆவலோடு


ஜாய்ஸ் அரவாமுதன்

 

  Cream Center இல் நாகராஜனை எதேச்சையாக சந்தித்தேன். கூடவே ஒரு பதினேழு வயது பெண். அழகாக இருந்தாள். நாகராஜின் மனைவி சாயலாக இருக்கவேண்டும். கொஞ்சம் மூக்கில் கொஞ்சம் மோவாயில் மட்டும் நாகராஜ். அவனைப்பார்த்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் இருக்கும். நாங்கள் ஒன்பதாவது படிக்கும்போது நாகராஜ் எங்கள் கிளாசில் சேர்ந்தான். நாங்கள் கேள்விப்பட்டிராத ஏதோ பெசன்ட் நகர் என்றான். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெசன்ட் ஸ்கூல், அப்புறம் வீட்டில் தனியா அனுப்பவே அனுப்பாத எலியட்ஸ் பீச். “அங்கே