Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: ஜெயஸ்ரீ ஷங்கர்

24 கதைகள் கிடைத்துள்ளன.

ஊமைக் காயங்கள்…..!

 

  பாட்டி….பாட்டி..முழிஞ்சிண்டு இருக்கியா பாட்டி…அம்மா…பார்த்துட்டு வரச் சொன்னா…அறைக் கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்து கேட்ட ஏழு வயதாகும் பூரணி கட்டிலில் படுத்திருக்கும் தனது பாட்டியின் அருகில் வந்து பார்க்கவும், தன் பேத்தி பூரணியின் குரல் கேட்டு விழித்த அகிலா… அட…..பூரணிக் குட்டியா….வா..வா…..வா….என்று ஆசையோடு அழைக்க… அப்போ….நீ முழிச்சிண்டு தானே இருக்க….அம்மா…என்னைப் பார்த்துட்டு வரச்சொன்னா….என்று பேத்தி தனது இளம்குரலில் சொல்ல… ஆமாம்டி தங்கம்….பாட்டி முழிச்சுண்டு தான் இருக்கேன்னு அம்மா கிட்ட போய் சொல்லிட்டு வா….எங்கே….இங்கே பாட்டி பக்கத்துல…வா…


தாய்மையின் தாகம்……!

 

  வீதி உலா சுற்றி வந்து களைத்த சூரியன் அலுப்புத் தீர கடலுள் முங்கிக் குளிப்பதை வெட்கப் புன்னகையில் பட்டு மேகங்கள் கன்னம் சிவக்கக் கண்டு மயங்கிக் கொண்டிருக்கும் அந்தி சாயும் மாலை நேரம். அந்த ரம்மியமான மாலைக் காட்சியைத் தன் வீட்டு பால்கனியில் நின்று கொண்டு ரசித்துக் கொண்டிருந்த உமாவின் கவனத்தை கீழே விளையாட்டுத் திடலில் இருக்கும் ஊஞ்சல்களிலும் சறுக்கலிலும் ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தங்கள் பக்கமாக இழுத்தனர். இயற்கையோடு இணைந்திருந்த மனம் திரும்பி


மஞ்சள் கயிறு…….!

 

  திடுதிப்புன்னு காரில் வந்திறங்கிய தன் மகளின் மொட்டைக் கழுத்தைப் பார்த்ததும் பார்வதிக்கு நெஞ்சு திக்கென்றது…அங்கே உஷாவை இறக்கிவிட்டுவிட்டு மாப்பிள்ளை சுரேஷின் கார் விர்ரென்று கிளம்பிச் சென்றது. உள்ளே நுழையும் மகளை…வா…வா..என்ன திடீர் விஜயம்..? என்றழைத்த பார்வதியின் மனசு “வந்ததும் வராததுமா…இப்போவே கேட்காதே…ன்னு தடுத்தது…” . ” ம்மா….இன்னைக்கு நேக்கு ஒரே…தலைவலி…அதான்…ஆஃபீஸுக்கு லீவைப் போட்டுட்டு சுரேஷை இங்கே இறக்கி விடச் சொன்னேன்…ஈவினிங் வந்து பிக்அப் பண்ணிப்பான். சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு செருப்பை ஓரமாக கழட்டி விட்டு உள்ளே நுழைந்தவள்


அம்மாவாகும்வரை……!

 

  ஒரு வழியாக் பெண்ணோட கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் கணக்கை சரி பார்த்து முடித்து விட்டு கடைசியாக இருக்கும் மிச்சம் மீதி சாமான்களைக் கட்டி டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்ததை மேற்பார்வை பார்த்தபடி பரபரத்தாள் ராஜம். அந்த இலைக்கட்டையும் எடுத்துப் போட்டுக்கோ,அதோ அங்க ஒரு கூடை கிடக்கு பாரு…அதையும் எடு….எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு வைக்காமல் பரவலா வைப்பா..கடைசீல அங்க வந்து எடுக்கும்போது எல்லாம் கவிழ்ந்து கொட்டிப் போச்சுன்னு சொல்லுவீங்க….என்றபடி கடைசியா


மீளாத பிருந்தாவனம்..!

 

  சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்…உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட….காலங்கார்தால என்னதிது…..மழையா…? என்று போர்வையை உதறி எழுந்தார்..வீடு வெறிச்சென்று சமையல் அறையில் சப்தமின்றிப் பாலைவனம் போலிருந்தது ! .அதைத் தொடர்ந்து மின்வெட்டும் கூடவே வந்ததும், அலுப்பு தான் வந்தது அவருக்கு….நாலு தூத்தல் போட்டால் போதும் கரண்டுல கையை வைக்க இவங்களுக்கு ஒரு சாக்கு…..என்று அங்கலாய்தபடியே….வாசல் கதைவத் திறந்தார். இதமான குளிர்காற்று லேசான சாரலோடு முகத்தைத் தடவியது.சூரியன் மேகத்தை விலக்கி