கதையாசிரியர் தொகுப்பு: ஜெயந்தி சங்கர்

19 கதைகள் கிடைத்துள்ளன.

நாலேகால் டாலர்

 

  காலையில் எழுந்து வழக்கம்போல அவரவர்க்குப்பிடித்ததைச் செய்து அவரவர் டிபன்பாக்ஸில் அடைத்து ஆறரைக்கே ஸ்கூல் ஆபீஸென்று மூவரையும் கிளப்பியனுப்பியாகிவிட்டது. தீபாவளிப் புடைவையின் ஜாக்கெட்டை மிகவும் டைட்டாகத் தைத்திருந்தான் டெய்லர். கொடுத்துக் காத்திருந்து வாங்கிவரவேண்டும், தீபாவளி மின்னட்டைகள் அனுப்பவேண்டும் என்று மனதிற்குள் அன்றைய வேலைகளின் பட்டியல் ஓடியது. குளித்து, சாப்பிட்டுவிட்டு, வாஷிங் மெஷின் துவைத்துக்கொடுத்த துணிகளை உலர்த்தி, காய்ந்திருந்த சில உடைகளை இஸ்திரி செய்து மடித்து வைத்துவிட்டு, டெய்லர் கடைக்குக் கிளம்பினேன். வீடுதிரும்பும் போதே அருணா, அர்ச்சனாவுக்குப் ‘பாலக்


மிருகன்

 

  “சரிம்மா, சரி. நீ என்ன சொல்றியோ அப்படியே செஞ்சிடலாம். ஆனா இப்ப நீ பயப்படாதேயேன் ப்ளீஸ். அங்க பாரு, கொழந்த கூட இப்ப நல்லாத் தூங்கறான். தைரியமா இரும்மா”, நாற்காலியைக் கட்டிலருகே இழுத்துப் போட்டுக் கொண்டு கட்டிலில் அஜீத்தை அணைத்தவாறிருந்தவளை தலைகோதிச் சமாதானப்படுத்த முயன்றேன். மருத்துவமனை அறையின் மங்கிய விளக்கொளியிலும் பளீரென்றிருந்த படுக்கையின் வெண்மையின் பின்புலத்தில் நவீன ஓவியமாய்த் தெரிந்தாள். “நமக்கு இந்த ஊரே வேணாங்க, திரும்பிப் போயிடலாங்க. ப்ளீஸ்ங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.


நுடம்

 

  நேஹாவின் போக்கு எனக்குப் புரியவே வெகு நாட்கள் ஆயின. என் சொந்த மகளே எனக்குப் பல சமயங்களில் புரியாத புதிராய் தான் இருந்தாள். சமீபகாலமாய் சிறுமியின் போக்கில் அதிகமான தீவிரம். இத்தனையிலும் வேதனை என்னவென்றால் சிந்திக்கவும் சில நிமிடங்கள் கிடைக்காத என் வேலை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்டாயம். பொருளாதாரம் காரணமாய் இல்லாமல் படித்து விட்டதன் ஒரே காரணமாய், கிடைத்த நல்ல வேலையை விட மனம் இல்லாமல் நான் வேலையை உடும்புப்பிடியாய் பிடித்திருந்தேன். இயல்பாகவும் எனக்கு வீட்டு


தையல்

 

  இன்னமும் கூட நடக்கச் சிரமப் பட்டாள். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவளின் ஒன்பது தையல்களும் பிரிக்கப் பட்டிருந்தன. இருந்தாலும், இன்னும் புண் நன்றாக ஆறவில்லை. விடாமல் ஆயின்மெண்ட்டை இரண்டு வேளையும் தடவி வந்தால், இன்னும் ஒரு வாரத்திற்குள் நன்றாகக் காய்ந்து குணமாகி விடும் என்று டாக்டர் சொல்லியிருந்தார். ஐப்பசிமாத அடைமழையில் குழந்தையின் துணிகள் காயாமல் உள்கொடிகளில் மின்விசிறியின் வேகத்தில் லாலிபீலியென்றாடின. வெயில் படாமல் அவை வாடையடித்தன. சுதா குளிப்பாட்டிக்கொடுக்கப்பட்ட தன் பத்து நாள் குழந்தையைப்