கதையாசிரியர் தொகுப்பு: ஜெயந்தி சங்கர்

19 கதைகள் கிடைத்துள்ளன.

சிறுவியாபாரி குடும்பத்திலிருந்து ஒருவன்

 

  ஒரே நேரத்தில் சிறுவியாபாரிகளையும் வசதி படைத்த குடும்பங்களையும் பற்றிப் பேசுவதே அபத்தமானது. இங்கு நாம் மிகவும் மேலோட்டமாகப் பேசுவதைப் போலிருக்கிறது இல்லையா?. சரி, இப்படி வைத்துக் கொள்வோம். தலைமுறை தலைமுறையாக சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். எந்த முடியாட்சி யின் போது இந்தக் குடும்பம் சிறு வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கியிருக்கும்? சொல்லவே முடியாது. எந்தெந்த சில்லறைச் சாமான்களை விற்றிருப்பார்கள்? இதையும் சொல்லிட முடியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை.


திரிசங்கு

 

  ‘திரிசங்கு’ன்னா என்ன ? .. .. .. .. ம்? பாட்டி தன் வேலைக்கு நடுவிலேயும் வந்து எனக்குச் சாப்பாடு கொடுக்கறாங்க. போதும்னு நான் சொன்னாலும் விடாம நான் மிச்சம் வெச்ச சாதத்தையெல்லாம் ஸ்பூனால எனக்கு ஊட்டி விடறாங்க. “பாருப்பா, உனக்கு அடுத்த வாரம் அரையாண்டுத் தேர்வு வருதில்லையா, நீ வீட்டுப் பாடத்தையெல்லாம் ஒழுங்கா செஞ்சிட்டு அப்புறமா ரவியோட விளையாடுவியாம். என்ன, நல்ல பிள்ளை யில்லையா,ம்..” கூறிக்கொண்டே பாட்டி அவசர அவசரமாகப் போய் விடுகிறார். அடடா,..நான்


கடைசிக் கடிதம்

 

  அன்புள்ள மதுரன், இக்கடிதத்தைப்படிக்கும் போது நீயும் உன் தம்பிதங்கையும் வளர்ந்து நன்றாகப் படித்துக்கொண்டிருப்பீர்கள். நான் விழைவதும் அதுவே. உலக சரித்திரத்தில் இல்லாவிட்டாலும், உன் வாழ்க்கை வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் இந்தக் கடிதம் இன்னும் ஏழு வருடத்திற்குப் பிறகு உன்னுடைய இருபத்தியோராவது வயதில் உனக்குப் படிக்கக்கிடைக்கும். அப்படித்தான் என் அக்காவிடம் நான் வேண்டிக்கொள்ளப்போகிறேன். விடைகளில்லாக் கேள்விகளால் குழம்பும் உனக்கு விடைகள்மட்டுமன்றி என் இப்போதைய செயல்களுக்கான நோக்கங்களும் விளக்கங்களும் கிடைக்கவேண்டும் என்றே முடியும்போதெல்லாம் எழுதுகிறேன். சில மாதங்களுக்கு முன்பிருந்த சுறுசுறுப்பு


சேவை

 

  எம்ஆர்டீயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம் ஒரே மணிநேரத்தில் அவருக்கு இரண்டாவது முறையாக வந்திருந்தது. என்னை செல்பேசி மூலமே மேற் பார்வையிட்டார். “ஹலோ, ..பெடோக் தாண்டிட்டேன் சர், அரை மணிநேரம் முன்னாடியே போயிடுவேன். கவலையே வேண்டாம். ம்,.ஆமா, ‘திருமதி. லீலா’ னு கொட்டகொட்டயா அட்டையில எழுதி எடுத்துகிட்டேன். நோ ப்ராப்ளம்,பை, ” என்றதுமே துண்டித்துவிட்டார். ராஜனின் செயல் எனக்குச் சற்று விநோதமாகத்தான்


ஈரம்

 

  ‘என்ன சட்டம், என்ன ஒழுங்கு, இந்த ஊருக்கு இணையே இல்ல’ இதையே ஓராயிரம் முறை சொல்லியிருப்பேன். காலை வைக்கக் கூசும் ரயில் நிலையத்தரைகள், எறும்பின் சுறுசுறுப்புடன் பல இனமுகங்கள், சாலையில் வரிசையாய் வழுக்கிக் கொண்டோடும் வாகனங்கள், விண்ணைத்தொட்ட கட்டிடங்கள், கருத்துடன் வளர்க்கப்படும் சாலையோர மரங்கள், எங்கும் நிறைந்திருக்கும் சுத்தம் எல்லாவற்றையும் பட்டிக்காட்டானாய் வாய்பிளந்து பார்த்தேன். ‘சாங்கி’ விமானநிலையம் வந்திறங்கி, ‘பூலோகம் தானா?!’ என்று வியந்த அந்த நாளை என் வாழ்நாளில் மறக்கவேமுடியாது. நான்கு வருடங்களுக்கு முன்,